ஊமைச்செந்நாய் மலையாளத்தில்…

 

umai

ஒவ்வொரு ஆண்டும் மலையாள இலக்கிய இதழான பாஷாபோஷிணியில் மட்டும்தான் நான் மலையாளத்தில் எழுதுகிறேன். முந்தைய ஆண்டுகளில் அறம், வணங்கான், நூறுநாற்காலிகள், யானை டாக்டர் ஆகியவை மலையாளத்தில் வெளிவந்தன. நூறுநாற்காலிகள் , யானை டாக்டர் ஆகியவை சிறிய நாவல்கள் என்று தனிநூல்களாக அங்கே வெளியாயின. அவற்றுக்கு பதிப்புரிமை இல்லை என்பதனால் ஒரேசமயம் பத்துக்கும் மேற்பட்ட பதிப்பகங்களால் வெளியிடப்பட்டன. ஒவ்வொன்றும் மூன்று லட்சம் பிரதிகளுக்குமேல் விற்றுள்ளன.

சென்ற ஆண்டு ஊமைச்செந்நாய் சிறுகதையை பாஷாபோஷிணியில் எழுதினேன். இப்போது அது ஒரு ‘நாவல்’ ஆக நூறுரூபாய் மதிப்புள்ள நூல் வடிவில் வெளிவந்துள்ளது. தமிழைவிட சற்று நீளமானது என்றாலும் என் நோக்கில் அது சிறுகதைதான். ஆனால் கேரளத்தில் பயணங்களின்போது சிறு நூல்களை வாங்குபவர்கள் மிகுதி. அவர்களுக்கான நூல் இது. ஆகவே இதுவும் லட்சத்தை தொடக்கூடும். மலையாளத்தில் பெயர் ‘மிண்டாச்செந்நாய்’.

‘കാടിനെപ്പറ്റി എഴുതുമ്പോള്‍ അനുഭവിക്കുന്നത് നഗ്‌നനായി പച്ചപ്പിലൂടെ നടന്നുപോകുന്ന സ്വാതന്ത്ര്യം’……

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-66
அடுத்த கட்டுரைமனிதர்களுடனும் அப்பாலும்