நண்பர்களே,
இந்த வருடம் தொடர்ச்சியான நான்காம் ஆண்டாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக ஒரு புதிய வாசகர் சந்திப்பு ஈரோட்டில் நடைபெற்றது. அதில் சிலருக்கு இடமளிக்க இயலவில்லை, ஆகவே இந்த இரண்டாவது சந்திப்பு. இந்த இரண்டு நாட்களிலும் எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்து பேசலாம். அவர் சனி காலை வந்து ஞாயிறு இரவு தான் ஊர் புறப்படுகிறார். சனி இரவு நிகழ்விடத்திலேயே புதிய வாசகர்களுடன் தங்குகிறார். இலக்கியத்தையும் அறிவுத்துறையையும் தீவிரமாக எடுத்துக்கொள்பவர்களை இந்த சந்திப்பிற்கு வரவேற்கிறோம். சந்திப்பில் இலக்கியம், வரலாறு, தத்துவம் பற்றி பொதுவாக உரையாடல் அமையும். கடந்த ஆண்டுகளில் இது மிகுந்த பயன் அளித்ததாக சந்திப்பிற்கு வந்திருந்த வாசகர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே ஓரிரு முறை சந்தித்தவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம். விருந்தினர் இல்லத்தில் 20 பேர்வரை தங்கலாம் எனவே சுமார் 20 பேர்களையே ஏற்றுக்கொள்ள முடியும்.
கடந்த ஆண்டுகளில் பதிவு செய்துவிட்டு தகவல் அளிக்காமல் வரத்தவறியவர்கள் இதில் விண்ணப்பிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
இந்த சந்திப்பில் பங்கேற்க விரும்புபவர்கள்,
பெயர் :
வயது :
தற்போதைய ஊர் :
தொழில் :
மின்னஞ்சல்:
செல் பேசி எண் :
ஆகிய விபரங்களுடன் எனக்கொரு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் இடம் உறுதி செய்யப்பட்டவுடன் சில நாட்களில் பதில் மின்னஞ்சல் அனுப்பப்படும்.
சந்திப்பு நடைபெறும் இடம் : நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிபட்டி.
தேதி, நேரம் : 16.3.2019 சனி காலை 10 முதல் 17.3.2019 ஞாயிறு மதியம் 1.30 வரை.
தொடர்புக்கு:
மணவாளன்
98947 05976,
62823 43470
நாமக்கல்லில் தொடர்பு கொள்ள :
வரதராஜன்
99524 30125
மகேஷ்
98946 20464