உரையாடும் காந்தி – ஓர் உரையாடல் – வேலூர்

Screenshot_20190211-111807_Gallery

அன்புள்ள ஜெ,

வணக்கம் நான் க. விக்னேஷ்வரன் வாசகசாலை அடிப்படை உறுப்பினர்களில் ஒருவன். கடந்த ஒரு வருடங்களாக ஒவ்வொரு மாதமும் வாசகசாலை மற்றும் வேலூர் மாவட்ட தந்தை பெரியார் நூலகம் இணைந்து இலக்கிய கூட்டங்களை வேலூரில் நடந்துகிறோம்.

இந்த முறை உங்களின் “உரையாடும் காந்தி” என்ற கட்டுரைத் தொகுப்பை கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்கிறோம். (அழைப்பிதழை கிழே இணைந்துள்ளேன்.)

என்னளவில் “உரையாடும் காந்தி” தொகுப்பு இன்றைய சமூக சூழ்நிலையில் அதுவும் காந்தி போன்ற ஆளுமையை தவறாக புரிந்துகொண்டு விமர்சனம் செய்யும் இன்றைய இளைஞர்கள் மத்தியில் கண்டிப்பாக எடுத்துச் செல்லப்பட வேண்டிய தொகுப்பு.

எனவே மிகச்சிறந்த எழுத்தாளரின், மிகச்சிறந்த தொகுப்பை கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்வதில் வாசகசாலை(வேலூர்) பெருமையும், அன்பும் கொள்கிறது.

என்றும் அன்புடன்.

க. விக்னேஷ்வரன்,

வேலூர்.

முந்தைய கட்டுரைமிசிறு கடிதங்கள்
அடுத்த கட்டுரைமதுரை, அபி, இறையியல் கல்லூரி, தலித் இலக்கியம்