கல்பற்றா நாராயணன் கவிதைகள் – கடிதங்கள்

kal

ஆகாயமிட்டாய் – கல்பற்றா நாராயணன்

கல்பற்றா நாராயணன் – இன்னும் மூன்று கவிதைகள்

ஜெ

கல்பற்றா கவிதைகளை இன்னும் பல செய்து ஒரு தொகுப்பாக கொண்டுவர வேண்டும். அதற்கு நீங்கள். முயல வேண்டும். இன்றைய கவிதைகள் கண்ணீரைப் பெருக்கெடுக்கச் செய்தன.உங்களுக்கு நன்றி !

இசை

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

கல்பற்றா நாராயணன் அவர்களின் மூன்று கவிதைகளும் இந்நாளை உவகையாலும் அருளாலும் நிறைத்தது. தவறாக கவிதை – பிரார்த்தனை, சொற்கள் தேடப்படுகின்றன, சொற்கள் குறைத்துக்காணப்படுகின்றன, சொற்கள் அருள் வடிவம் கொள்கின்றன .. வெறும்சொற்களே என்பதில் இருந்துஎந்த ஒரு சொல்லும் என்ற இடத்திற்கு, உலகியலில் இருந்து அருளுக்கு ..சடங்கிலிருந்துமெய்மைக்கு … பொருளாகத் தொடங்கி இன்மை என நிறைவது. துவங்கியது எட்டப்பட்டது. அதுதுவங்கியபோதே எட்டப்படுவதும் உறுதியாகிவிட்டது. சொற்களுக்கு முன்னால், சொற்களின்போது, சொற்களுக்குப் பிறகு என பிரார்த்தனை எங்கும் நிறைந்தது. கவிதை ஒருபோதும்விளக்கப்படக்கூடாது அது எட்டப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். கவிதை மொழியின்உருஅருவம் என்று புரிந்துகொள்கிறேன்.

சிலசமயங்களில் – வியந்து கூறப்படும் அற்புதங்கள் செய்தவரில் அல்ல வலிதாளாமல் கதறிஅழுதவரில் கடவுளைக் காணும் இதன் வழிபாடு பேரன்பு சொற்களைத் தொட்டுசென்று கவிதைக்குவெளியே நிற்கிறது.

அன்புடன்

விக்ரம்
கோவை

அன்புள்ள ஜெ

கல்பற்றா நாராயணனின் கவிதைகள் என்னைப்போல கவிதைக்குள் புகத்தெரியாதவர்களையும் உள்ளிழுப்பதாக அமைந்தன. அருமையான சிறிய வரிகள். எழுத்துவரிசையை பிரார்த்தனையாக அமைப்பதைப்பற்றிய கவிதை அருமையானது. நிஸர்க்கதத்த மகராஜ் சொன்ன ஒரு உவமை உண்டு. இங்கே இருக்கும் பொருட்கள்தான் பிரம்மம். இவற்றை இன்னொருவகையில் அடுக்கி வைத்தால் பிரம்மம் வந்துவிடும். நாம் நம் ஆசை தேவை அச்சம் ஆகியவற்றின் அடிப்படையில் அடுக்கியிருக்கிறோம்

சத்யமூர்த்தி

அன்புள்ள ஜெ

கல்பற்றா நாராயணனின் கவிதைகள் அழகானவை. எளிமையின் வழியாகச் சென்றடையும் அனுபவமே இலக்கியத்தில் உச்சம். மூளையை கொண்டு சென்றடையும் இடம் அல்ல. அதேசமயம் சல்லிசான அனுபவங்களுக்கும் இலக்கியத்தில் இடமில்லை. சமூகச்செய்தியைச் சொல்லும் பீடி கவிதையில்கூட பீடி வாங்குவதற்குப் பதில் லாட்டரி வாங்கச்சொல்லும் இடத்தில்தான் கவிதையின் ஆழம் உள்ளது. இக்கவிதைகளை அணுகுவதற்கு மொழியோ பண்பாடோ தடையாகவே இல்லை

டி.சுரேஷ்குமார்

ஜெ

ஒரே கவிதையில் ஒரு தாயம் பூஜ்யம் பன்னிரண்டு என மறிந்துவிடுவதுபோல இரு வரிகள்.  சிலசமயங்களில் வெறும் நீர் மதுவாகும் தருணம் அமையாதவர் எவர்? எந்த புனிதர் சிலசமயங்களிலேனும் வலிதாளாமல் கடவுளை அழைத்து கதறாமலிருந்திருக்கிறார்? ஒரு அதிர்ச்சிபோல மனதைத்தாக்கின அந்த வரிகள். கல்பற்றா நாராயணனுக்கு முத்தங்கள்

சாம்

கல்பற்றாவைப்பற்றி ஒரு கட்டுரை

கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2

கல்பற்றா நாராயணன் கவிதைகள்

கல்பற்றா கவிதைக்கூடல் -படங்கள்

நெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது?

மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து

சுமித்ரா

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-49
அடுத்த கட்டுரைவெள்ளிநிலத்தில்…