புதிய வாசகர் சந்திப்பு ஈரோடு

ஜெயமோகன்

வழக்கம்போல புதியவாசகர்கள் சந்திப்புக்கு ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். ஈரோட்டில் இருபதுபேருக்கே இடமிருக்கும். ஆகவே இன்னொரு புதியவாசகர் சந்திப்பை நிகழ்த்தலாமென்று திட்டமிட்டிருக்கிறோம். ஈரோடு வாசகர் சந்திப்புக்கு இருபதுபேருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அருகமைவு, அகவை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தெரிவு நிகழ்த்தப்பட்டுள்ளது. பிறருக்கு அடுத்த சந்திப்பு ஒருங்கிணைக்கப்பட்டபின் கடிதம் அனுப்பப்படும்.

மொத்த ஈரோட்டுக் கும்பலும் கும்பமேளாவுக்கும் கேரளத்தில் கதகளி நிகழ்வுக்குமாக கிளம்பிச் சென்று மீண்டமையால் ஏற்பாடுகள் பிந்திவிட்டன. மன்னிக்கவும்.

ஜெ

முந்தைய கட்டுரைகுட்டுதற்கோ…
அடுத்த கட்டுரைபனைகளின் இந்தியா – அருண்மொழி நங்கை