கொலைவாள்!

dog

அன்புள்ள ஜெ

முகநூலில் தாமரை செந்தில் குமார், என்னும் தோழர் 28 அக்டோபர், 2018 ·அன்று எழுதிய குறிப்பு இது

தோழர் சி.மகேந்திரன்  ரொம்ப வருடத்திற்கு முன்பு ஒரு பயணத்தில் ஜெயமோகனோடு அமர்ந்து செல்ல நேர்ந்ததாம். அப்போதுபேசிகொண்டதில் தலித்துக்களை இழிவாக சொல்லும் ஒரு தேர் கதை எழுதியதைப்பற்றி ஜெ.மோவிடம்தோழர் கேட்டாராம். அதற்கு அவர் நான் எழுத்தாளன் என்னிடம் பேனா உள்ளது நான் என்ன வேண்டுமானாலும் எழுதுவேன் என்றாராம்

அதற்கு நான் கம்யூனிஸ்ட்காரன் என்னிடம் அருவாள் உள்ளதுஎன்றாராம். இதுபோன்ற பலவற்றை ஆரம்பத்திலே அறுத்தெறியாமல் விட்டதின் விளைவுதான்…

இதற்குக்கீழே தோழர்களின் கருத்துரைகள் இவ்வாறு இருந்தன.

இன்குலாப் இன்குலாப் நாமும் Com.cm போல பல பேரிடம் சொல்ல வேண்டியுள்ளது

Bala Krishnan அவன் போனாவிலிருந்து வருவது மை அல்ல பொய்.ஆதிக்கத்தின்
கொழுப்பு.பல ஆண்டுகளுக்கு முன்பே அவன் நாக்கை அறுத்திருக்க வேண்டும்

Kut Gnanamoorthy தோழர் சி.எம்.ன் அருமையான் பதிலடி

Muthukumaran Packirisamy தோழர் பதிலடி நன்று

KR Suubramanian அறுத்தெரிய வேண்டும் என்றுணர்த்திய பாசமிகு தோழர் மகேந்திரன் அவர்கள் போற்றப்படக்கூடிய,பாதுகாக்ககூடிய தோழருமாவார்.எதிர்கால இளைஞர்களுக்கு அவரே விடிவெள்ளி.வாழ்த்துக்கள்.

Logu Che தோழா முருகதாசும் எழுத்தாளரும் இலுமினாட்டிகள் இருப்பார்களா ..?

Sgm Lenin சபாஸ் சரியான பதிலடி அண்ணா.

Lamaze Maysill Super tholar

Bakya Bakya Bakyaraj ஏங்கிட்ட துப்பாக்கி இருக்கு இனி எழுதுவ ?

காசி ராஜா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் தோழர்!

S M Nantha .ஜெயமோகன் போன்ற வக்கிரப்புத்தி எழுத்தாளனையெல்லாம் சமூகம் சாட்டையால் அடித்திருக்க வேண்டும்.தோழர் C.M அதை செய்துவிட்டார்.நன்றி

Siva Shanmugam அப்ப இதுமாதிரி ஆட்களை அ …வேண்டியதுதான்

Ganapathi Mannai நெத்தியடி பதில்

Bharathwaj Chelliah ஜெயமோகன் எழுத்தாளர் என்ற முறையில் மனிதநேயம் பற்றி எழுத வேண்டும். எழுதுகோலும் தெய்வம்; எழுத்தும் தெய்வம் என்ற பாரதி வரிகளை மறந்தாரோ? எது வேண்டுமானாலும் எழுதுவேன் என்று கூறும் ஜெயமோகனை நாம் எது வேண்டுமானாலும் செய்யலாம் என நினைப்பதை நம் மனிதநேயம் தடுக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அரிவாளும் சுத்தியலும் தத்தமதுப் பணியினைச் செய்யும் என்பதை அவர் மனதில் கொள்ளவேண்டும்.

Gajapathi Krishnan அருமையான பதிவுகள்

செல்வக்குமார்

அன்புள்ள செல்வக்குமார்,

தோழர் மகேந்திரனை இருமுறை சந்தித்திருக்கிறேன். பாவப்பட்ட ஆத்மா. பொதுவாக சில நல்ல சொற்கள் பேசிக்கொண்டோம். மற்றபடி அவர் தோழர்களுடனான ஏதோ தனிச்சுற்றுப் பேச்சில் கொஞ்சம் எடுத்துவிட்டிருக்கலாம். காதலிலும் புரட்சியிலும் பொய் சொல்லலாம்தானே? தோழர் பற்றி இருதளங்களிலும் செய்திகளும் வந்ததுண்டு.

ஆனால் அதற்காகப்போய் அவருக்கு புஸ்திமீசை ஒட்டி கொலைவாளினை எடடா ரேஞ்சுக்கு கற்பனை செய்வதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. அவருக்கும் வருத்தமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

தோழர்கள் நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால் நகைச்சுவைக்கு அவர்களின் பங்களிப்பு அதிகம்.

ஜெ

முந்தைய கட்டுரைஅறிவியல் புனைகதைகள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைசோ.தர்மனுக்கு மனோன்மணியம் சுந்தரனார் விருது