கல்பற்றா நாராயணனுக்கு விருது

 

kal

கேரளத்தில் வழங்கப்படும் முக்கியமான இலக்கிய விருதான  ‘பத்மபிரபா விருது’ மலையாளக் கவிஞரும் விமர்சகரும் பேச்சாளருமான கல்பற்றா நாராயணனுக்கு வழங்கப்படுகிறது. மலையாள நாளிதழான மாத்ருபூமியின் உரிமையாளர்களில் ஒருவரான எம்.பி.வீரேந்திரகுமார் தன் தந்தை பத்மநாப கௌடரின் நினைவாக இவ்விருதை அளிக்கிறார். 1996 முதல் தொடர்ச்சியாக இந்த விருது வழங்கப்பட்டுவருகிறது.

வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி கேரளத்தில் கல்பற்றா நகரில் இவ்விருது வழங்கப்படுகிறது. நான் 3 அதிகாலை அலஹாபாதிலிருந்து கோவை வந்திறங்கி கல்பற்றா செல்கிறேன். 4 அங்கிருப்பேன். ஐந்து மாலை விழாவில் கல்பற்றா நாராயணனை பாராட்டி உரையாற்றுகிறேன். ஈரோடிலிருந்து நண்பர்கள் வருகிறார்கள்.

ஆகாயமிட்டாய் – கல்பற்றா நாராயணன்

கல்பற்றா நாராயணன் – இன்னும் மூன்று கவிதைகள்

கல்பற்றா நாராயணன் – மேலும் நான்கு கவிதைகள்

கல்பற்றா நாராயணன் – மூன்று கவிதைகள்

முந்தைய கட்டுரைவிமானநிலையப் பிச்சை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-43