கே.கே.முகம்மது அவர்களுக்கு பத்ம விருது

kk

தொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்

தொல்லியலாளர் கே.கே.முகம்மது அவர்களுக்கு பத்மஸ்ரீ வழங்கப்பட்டுள்ளது. இன்றைய நாளின் இன்னொரு நிறைவு. அவர் பெயரை சற்று கழித்தே என்னால் காணமுடிந்தது. கடந்த சில ஆண்டுகளில் பத்ம விருதுகளில் பொதுவாக அதிகார அமைப்புகளுடன் விலக்கம் கொண்டிருக்கும் பலர் தேடிப்பிடித்து கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கே.கே.முகம்மது. தன் தொல்லியல் பணிகளுக்கு அப்பால் ஆர்வங்களில்லாதவர். குன்றாத ஊக்கம் கொண்டவர்.

சென்ற ஜனவரி மாதம் நாகர்கோயிலுக்கு என் விருந்தினராக வந்திருந்த கே.கே.முகம்மது அவர்களுடன் செலவழித்த ஒரு நாள் நினைவில் நிறைந்திருக்கிறது.

நம்பி நாராயணன் அவர்களுக்கும்  முகம்மது அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்தேன். இந்நாள் இனியது.

முந்தைய கட்டுரைதேசத்தின் இரு தலைவணங்குதல்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-34