விஷ்ணுபுரம் விழா – கடிதம் 19

award

விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு

விஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன?

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்

விஷ்ணுபுரம்விழா: கடிதங்கள்-16

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

எங்க யாராலும் மறக்கவே முடியாத வருசமா இந்த வருஷம் அமைஞ்சு போச்சு,குறிப்பா விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா அதுல கிடைச்ச சந்தோசம்  உங்களோட புத்தகங்களான  தன்மீட்சி,உரையாடும்  காந்தி இதை இரண்டையும் உங்க கையில சேர்த்தது  பெரும் நிறைவு .வெள்ளிக்கிழமை  மாலை  தொடங்கியது பரபரப்பு , நிறைய தயக்கங்களோட உள்ள நுழைஞ்சோம். எல்லோருக்கும் எங்களை உங்கள்  இணையத்துல வந்து இருந்த கட்டுரைகள்  நல்லாவே தெரிஞ்சு வழியா நன்றாக தெரிந்து  இருந்தது .

ஆனாலும்  பெரிய மனத்தடை,மனசுக்கு ஒரே  நிம்மதி முதல் நாள் நீங்கள் எழுதிய கட்டுரை மட்டும் தான் .எங்கோ ஒரு சின்ன  ஊர்ல இருந்து இலக்கிய கூட்டத்துக்கு வர்ற ஒருத்தரை பத்துன உங்கள் அக்கறை அவங்களும் மனநிறைவோட  பெரும் கனவு காண்றதுக்கான சாத்தியத்தை உருவாக்கி கொடுக்கும் அப்படிங்கிற வார்த்தை   .  நிகழ்வுக்கு வந்த நிறைய நண்பர்கள் மனசு விட்டு பேசி சிரிச்சு,சந்தோசமா இருந்த தருணங்கள் கண்ணுக்குளேயே இருக்கு .  ஒரு குடும்ப திருவிழா மாதிரி  இருந்தது,நிறைய புதுமுகங்கள் அவங்க எல்லோர் கிட்டேயும் பேசி அறிமுகமானோம் .எங்களை மாதிரி கொஞ்சமா இலக்கியம் படிச்சு இந்த நிகழ்வுக்கு முதல் முறையா தயங்கி யாராவது வந்து நிக்குறாங்களான்னு பார்த்து அவங்க கூட போய் நின்னு பேசிக்கிட்டோம் .வித விதமான நண்பர்கள் வித்தியாசமான பின்னணி ஆனா இணைப்பு மட்டும் வாசிப்பு மூலமா இருந்தது நிறைவா இருந்தது.அஜிதனும் சைதன்யாவும் உங்க தோள்மேல கைபோட்டு இயல்பா இருந்ததை பார்க்க அவ்வளவு மகிச்சியா இருந்தது .யாரோ நம்மளை வேற்று ஆளா பார்ப்பங்களோ அப்படின்னு மன்சனுக்குள்ள ஒரு நெருடல்,அந்த ஒற்றை நாகலிங்க மரம் எங்களை என்னவோ செய்தது .

அரங்குகளை அமைக்க காலையில எழுந்து எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சு வைச்சுக்கிட்டு இருந்தோம்,திடீர்ன்னு அரங்கு நிறைஞ்ச மாதிரி மக்கள் வந்து சேர்ந்துட்டாங்க .சாப்பாடு,தங்குமிடம் பார்த்து பார்த்து யார் மனசும் கோணாம ஏற்பாடு செய்து இருந்தாங்க .உண்மையில பெரிய மனநெருக்கடியான வேலை எல்லோருக்கும் சரிசமம்மா  எல்லாத்தையும் பகிர்ந்து கொடுக்கிறது ,நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறதுல இருக்கிற சிரமங்கள் தாண்டி எல்லார் முகத்திலும் அழகான சிரிப்பும் வரவேற்பும் இருந்தது .இலக்கிய அமர்வுகள் தொடங்குச்சு ,ஒருத்தர் மாத்தி ஒருத்தர் அமர்வுகள்ல போய் உட்கார்ந்து உரையாடல்களை கவனிச்சோம் .தும்பி,தன்னறம் புத்தக அரங்கு பார்த்து எல்லோரும் சந்தோஷப்பட்டாங்க ,மகிழ்ச்சியா வந்து நிறைய பகிர்ந்துக்கிட்டாங்க .நூற்பு கைநெசவு ஆடைகள் ,அம்பரம் குழந்தைகளுக்கான ஆடைகள் ,துவம் பெண்களுக்கான உள்ளாடைகள் ,துகள் துணிப்பைகள் ,மதர்வே கருப்பட்டி கடலைமிட்டாய் என எல்லா அரங்கையும் வந்து மக்கள் ஆர்வமா பார்த்து காது கொடுத்து நாங்க சொல்றதை கேட்டாங்க .நிறைய பேர் இந்த தற்சார்பு வாழ்க்கைக்குள்ள வரணும் அப்படின்னு  முடிவு பண்ணி   இருக்கறதையும் அதற்கான முயற்சிகள் செய்துகிட்டு இருக்கிறதையும் பகிர்ந்துகிட்டாங்க.

கோவையில் நடைபெற்ற இந்த நிகழ்வு,7 வருடங்களுக்கு முன்பு  இதே டிசம்பர் இறுதியில் திருப்பூர் காது கேளாதோர் பள்ளியில் உங்களை முதலில் சந்தித்த நாட்களினை வெகுவாக நினைவு படுத்தியது.காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு புகைப்படக் கலையை  கற்று கொடுக்க அதனை பாடத்திட்டமாக உருவாக்கி வரும்  அய்யலு குமரன் அண்ணா நிகழ்வு முழுக்க இருந்த உயிர்ப்பான தருணங்களை புகைப்படங்களாக எடுத்து பரிசு அளித்தது மிக நிறைவானது .

ஆரம்ப நாட்களில் வெகுவாக உரையாடுவதை தவிர்த்த நாங்கள் அரங்கசாமி,கடலூர் சீனு,கிருஷ்ணன்,விஜய ராகவன்  வன் என இந்த நண்பர்களிடம்  மனம் விட்டு நெடு நேரம் பேசினோம்.

தேவதேவன் அய்யா,நாஞ்சில் நாடன்,தேவிபாரதி,லட்சுமி மணிவண்ணன் என மூத்தோரிடம்  சட்டென்று உரையாடலை துவக்கிய என்னால் இளைய தலைமுறை எழுத்தாளர்கள், கவிஞர்கள் அவர்களுடன் உரையாட முடியவில்லை,ஆனால் அவர்கள் படைப்புகளை படிக்க ஒரு ஆர்வம் உருவாக்கியது. சுனில் கிருஷ்ணன் அவர்கள் முதல் நாள் பேச்சு மிகவும்  அணுக்கமாக இருந்தது.தேவி பாரதி அவர்கள் டால்ஸ்டாய் மற்றும் காந்தியை கண்டடைந்ததை குறித்து கூறிய அனுபவ பகிர்வு மனதை நிறை வாக்கியது.புத்துயிர்ப்பு புத்தகம் குக்கூ காட்டுப்பள்ளி நிலத்தில் யாருமற்ற நாட்களில் கயிற்று கட்டிலில் படுத்து கொண்டு இரவு பகலாக தொடர்ந்து வாசித்து இருக்கிறேன்.மீள்வாசிப்பு செய்ய மனது முடிவு செய்தது.

உரையாடல்,கேள்வி பதில்,விவாதம்,சூடான கேள்விகள்,சிக்கலான சூழல் ,நேர் எதிர் மனநிலை,புதிய வார்த்தைகள்,கலைச்சொற்கள்,தனித்தன்மை ,ஆழ்ந்து வாசிப்பது,தொடர்ந்து வாசிப்பது,தரவுகள் முன்வைப்பது,பெண்ணியம் என கலந்துகட்டிய கலவையாக முதல் நாட்கள் நிகழ்வினை உள்வாங்கினேன்.வெளி அரங்கில் விற்பனை பார்த்து கொண்டு  இருந்ததால் சில நிகழ்வுகளை தவற விட்ட வருத்தம் இருந்தது. முதல் நாள் இரவெல்லாம் நிகழ்வு குறித்தும் அதற்காக விஷ்ணுபுரம் நண்பர்கள் எடுத்து கொண்ட மெனக் கெடல்கள,திட்டமிடல்கள்  அதை யாருக்கும் பங்கம் இல்லாமல் செயல்படுத்திய விதம் மேலும் நிகழ்வின் ஏற்பாட்டில் சிறுமாறுதல் அல்லது தள்ளி போடுதல் நிகழ்ந்த போது உங்களின் கறாரான முகம் பார்த்து சற்று பயந்து போனோம் .அப்படியான ஒன்று தேவை தான் என இரண்டாம் நாள் நிகழ்வு  சமயங்களில் புரிந்து கொண்டேன் .

கோவையின் அனைத்து தரப்பட்ட மக்களையும் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வின் போது சந்திக்க வாய்ப்பு கிடைத்தது ,கோவை ஞானி  அய்யா ,பாதர் காட்சன் சாமுவேல் கவிஞர் புவியரசு ,நகலிசை கலைஞர் ஜான் சுந்தர் ,கண்ணன் தண்டபாணி ,மரபின் மைந்தன் முத்தையா  இன்னும் பெயர் தெரிந்திடாத ஆனால் படைப்புகளின் வழியே அறிமுகமான முக்கிய ஆளுமைகள்,பதிப்பகத்தார்கள்,புத்தக விற்பனையாளர்கள்  பலரை சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது .சிறிய ஊர்களில் இருந்து வந்த எளிய மனிதர்கள் துவங்கி வெளிநாட்டிலிருந்து வந்திருந்த  மக்கள் அவர்களின் ரசனை ,இந்த குறிப்பிட்ட நிகழ்வுடன் அவர்களுக்கு உரிய பந்தம் எல்லாம் அறிய அறிய வியப்பாக இருந்தது .அவர்களுக்கு பிடித்த உங்களது கதைகள் கட்டுரைகள் ஏதன் வழியே உங்களை தொடர்கிறார்கள் என்று அறிந்தது இன்னும் பெரும் மகிழ்வு .

முதல் நாள் நிகழ்வில் அரங்கம் தளர்வாக இருந்தது,இரண்டாம்  நாள் பொது மக்களும் கலந்து கொண்டதால் நிகழ்வு  ஒரு கட்டுக்கோப்பான ஒழுங்குக்குள் இருந்தது .முதல் நாள் நிகழ்வே மனதுக்கு  அனுக்கம் இருப்பினும் இரண்டாம் நாள் சமபந்தி என்று நினைத்து கொண்டோம் .சிறு கதைகள் ,கட்டுரைகள்,நாவல்கள் என்று மட்டும் வாசித்த எனக்கு பெரும் வியப்பு ,ஸ்டாலின் ராஜாங்கம்,ராஜ் கௌதமன் போன்றோரின் களஆய்வு,அதற்காக  அவர்கள் எடுத்து கொண்ட கால அவகாசம்  அர்ப்பணிப்பு (ஏனோ மனம் அலெக்ஸ் அவர்களை சுற்றி சுற்றி வந்தது ) சட்டென்று ஒரு தொய்வு  தோன்றுகிறது.ஆனால் இவர்களின் மனஉறுதி மிகப்பெரிது .

உங்களின் பேச்சை கேட்டகவே வெகு நேரம் காத்து இருந்தேன்,ஆரம்ப கதையே மனதை எங்கோ கொண்டு சென்று விட்டது .உண்மையில் லயித்து போய் உட்கார்த்து இருந்தேன் ,நிகழ்வு ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவத்தை கொடுத்து இருக்கும் ,ஆனால் உங்கள் பேச்சு அனைத்து தரப்புக்குமானதாக இருந்தது.மனது தொடர்ந்து வாசிப்பதற்கும் ,எழுதுவதற்கும் அதை பகிர்ந்து கொள்வதற்கும் உறுதி எடுத்து கொண்டது . மேலோட்டமான விஷயங்கள் தாண்டி உள்ளார்ந்த விஷயங்களை காண்பதற்கு வாசிப்பு எவ்வளவு அவசியம் என உணர்ந்து கொள்கிறேன்.

விஷ்ணுபுரம் நண்பர்களுக்கும் உங்கள் பிற வாசகர்களுக்கும் பெரும் நன்றி இப்படியான ஒரு நிகழ்வினை உருவாக்கி தொடர்ந்து நேர்த்தியாக நடத்துவதற்கு.அடுத்த ஆண்டு இன்னும் நிறைய நண்பர்களுடன் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புகிறோம் இரண்டு நாட்களும் கருப்பட்டி கடலைமிட்டாய் விற்பனை நன்றாக நடைபெற்றது,தற்போது இணையத்தின் வழியாக விற்பனையை  துவங்கி இருப்பது கண்டு மிகுந்த மகிழ்வு கொண்டார்கள் . மேலும் தும்பி,தன்னறம் பதிப்பகம் மற்றும்  குக்கூ காட்டுப்பள்ளி குறித்து நண்பர்கள் மிக ஆர்வத்துடன் கேட்டு அறிந்து கொண்டார்கள்.

எங்களின் விற்பனையில் ஒரு பங்கினை குக்கூ காட்டுப்பள்ளியின் அடுத்த கட்ட பணிகளுக்கு அளித்தோம். நண்பர்கள்  இரவு அங்கேயே தங்கிவிட்டு  மறுநாள் காலை உங்களை சந்தித்து விடை பெற்றோம்.

ஸ்டாலின் கள்ளிப்பட்டி

விஷ்ணுபுரம் விழா- கடிதம் – 17

விஷ்ணுபுரம்விழா: கடிதங்கள்-16

விஷ்ணுபுரம் விருதுவிழா உரைகள்- கடிதங்கள்-15

விஷ்ணுபுரம் விருதுவிழா:தேவிபாரதி உரை

விஷ்ணுபுரம் விழா: அனிதா அக்னிஹோத்ரி உரை

விஷ்ணுபுரம் விழா: மதுபால் உரை

விஷ்ணுபுரம் விருது விழா : சுனீல் கிருஷ்ணன் உரை

விஷ்ணுபுரம் விருதுவிழா:ராஜ் கௌதமன் உரை

விஷ்ணுபுரம் விழா உரை – ஜெயமோகன்

விஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-35
அடுத்த கட்டுரைஎஸ்.ரா. – கடிதங்கள்