மலேசியாவின் வல்லினம் இணைய இதழ் ஒரு விமர்சனக் கட்டுரைப்போட்டியை அறிவித்துள்ளது. இது மலேசியக் குடிமக்களுக்கு மட்டும் உரிய போட்டி. 2018இல் வல்லினம் பதிப்பித்த 10 நூல்களில் 6 நூல்களை இந்த விமர்சனக் கட்டுரைப்போட்டிக்கு வல்லினம் ஆசிரியர் குழு தேர்ந்தெடுத்துள்ளது.அவற்றைப் பற்றிய கட்டுரைகளை போட்டிக்கு அனுப்பலாம்
போட்டியில் வென்றவர்களுக்கு ஏப்ரல் அல்லது மேமாதம் ஊட்டியில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்தும் குருநித்யா காவிய அரங்கில் கலந்துகொள்வதற்கான விமானக்கட்டணம் பரிசாக வழங்கப்படுகிறது