வெள்ளையானை – கடிதங்கள்

vellai

வெள்ளையானை வாங்க

வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்?

அன்புள்ள ஜெ  ,

வணக்கம்   இது என் முதல் கடிதம்  தங்களது நூல்கள்  வாசிக்க  துவங்கியுளேன்   இணைய தளம் ,  புத்தகம் மற்றும் Kindle வாயிலாக.  நான் வேலை    தொடர்பாக புவனேஸ்வர் சென்றேன் .உடன் வாசிப்புக்காக  கன்னிமாரா  நூலகத்தில்  கடன்பெறப்பட்ட வெ ள்ளை யானை  மற்றும்  கரிச்சான்  குஞ்சின்  எது நிற்கும்?  சிறுகதை தொகுப்பு . பயணத்தின் இறுதி நாள் இரவு  வெ ள்ளை யானையில் அயர்லாந்து  இளைஞன்  ஏய்டன் பைர்ன் அறிமுகம்  . அடுத்த நாள் சென்னை பயணம் . விமான நிலையத்தில் ஏய்டன் சென்னையின் கடற்கரை காட்சியுடன்  வாசிப்பு   தொடர்ந்தது

ஏய்டனின்  காட்சியின்   மன அலைச்சல்   நான்  ஒரிசாவில் கண்ட  சாதாரண மனிதர்களின்  வாழ்வியல்  யதார்த்தம்  வந்து சென்றது.   சென்னை திரும்பி  அன்று இரவே  முழுவதும்  வாசித்து முடித் தேன்  ஆனால்  சிந்தனை முழுவதும்  அன்றுவாழ்ந்த  பிற சமுகங்களின்  சிறுமையை ஆய்ந்த வண்ணம்  இருந்தது, ஐஸ்ஹவுஸ் அந்த  ஐய்யங்கார்  வீட்டில் தங்கிய  விவேகானந்தருக்கு  இந்த  நிகழ்வுகள்  கூறப்பட்டிருந்தால்  அந்த  இல்லத்தில்   தங்கியிருப்பாரா ?  போன்ற  எண்ணங்கள்.

அன்றாட அலுவல்களுக்கு மத்தியிலும்  நண்பர்களுடன்  உரையாடிய பொழுதும்  வந்துசென்றது.  கூடா ரை வல்லி  அன்று  நண்பர்  அக்கார அடிசில்  கொ டுத்த உடன்  பாதர் பிரண்ணன் கூற்றான  “கோடிக்கணக்கில்  இந்துக்கள்  சாகிறார்கள் ஆனால்  இந்துக்கோயில்களில்  உணவுப் பொருட்களை  கடவுள்மீது  கொட்டுகிறார்கள்.  பிராமணர்களும்  பிரபுக்களும்  பந்தி பந்தியாக அமர்ந்து விருந்து  உண்கிறார்கள்”   நினைவுக்கு வந்தது.

சமுக  ஊடகங்களிலு ம்    உயர் சாதி சமுகத்தில்  தற்காலம்  மிக வசதியான  வாழ்வு  நடத்தும் சாதி உணர்ச்சி  மிக்க பிராமணர்கள்  பொதுப்பிரிவினருக்கான  இடஒதுக்கிட்டுக்கு  ஆதரவாக பதிவுகளை  பதியும்   போது அந்தக்காலத்தில்   ஓரு வேளை அரிசி  சோறும்  காலைவேளை  கம்பும் கேழ்வரகும்  சாப்பிட்டதை   கோபமாக பதிந்து  இட ஒதுக்கடு  ஆதரவு   தரப்பாக  நான்  இருந்த  குழுக்களில்   பதிவுகள்   அதிகமாக  பகிரப்பட்டன. அந்த  சமயத்தில்  ஏய்டனின்   “எத்தனை நாள் பசித்திருக்கிறாய் ?” என்ற  கேள்விக்கு ஜோசப் சொல்லும்  “சிறுவயதில்  உணவை  விட  பசியை அதிகமாக அறிந்திருக்கிறேன்” என்ற  பதிலும் பசியை  விளக்கும்   போது .” முன்று நாட்களுக்குப் பின்னால் பசிக்காது. வயிற்றில்  அவ்வப்போது பெரிய வலி வரும் . சாட்டை யால் அடிப்பது  போல. அல்லது  சூட்டுக்கோலால் இழுப்பது போல.மற்ற படி எதுவுமே தெரியாது. பிரக்ஞை  என்பதே  இருக்காது  ஒருவாய்  உணவு  என்ற  ஒரே  நினை ப்பாக மன ம்  மாறிவிடும் ‘  என்ற  விளக்கமும்  நினைவில்  வந்ததை தவிர்க்க இயலவில்லை.

வெ ள்ளையானை  வாசிப்பு   எனக்கு    மறுக்கபட்ட  அல்லது எங்களால் மறக்க பட்ட மக்களின்  வரலாற் றின்  அறிமுகம்.  எனக்கு  இன்றயை சூழலில்  ஊடகங்களால்  பரப்பப்படும்  பிரச்சாரநெடியிலிருந்து   விலகியிருந்து  உண்மை தன்மை  அறிய  ஒரு  கை விளக்காக  அமைந்தது.  .  முன்பு  ஒரு பதிவில்  நீங்கள் வாசித்து விட்டு  அது பற்றி  உரையாடவும் வேண்டும்  என்று  கூறியிருந்தீர்கள். என்   அளவில்  இடஒதுக்கிட்டில் இருந்த  அறஉணர்வை  எடுத்துரைக்க வெள்ளையானை உதவிகரமாக  இருந்ததற்க்கு   நன்றி  .

தொடர்  வாசிப்பிற்க்கு  ஊக்கம்  அளிக்கும்  உங்கள்  பதிவுகளுக்கும் நன்றிகள்  பல.

அன்புடன்

ரா. முரளி

செ ன் னை

அன்புள்ள முரளி

நன்றி

அழகுகளில் மிகச்சிறந்தது நீதியுணர்வே என ஒரு சொல் உண்டு. அந்த அழகு கைகூடிய நாவல் என வெள்ளையானையை நினைக்கிறேன். பிறநூல்களையும் வாசியுங்கள்

ஜெ

அன்புள்ள ஜெ

வெள்ளையானையை மீண்டும் ஓர் இடைவேளைக்குப்பின் வாசித்தேன். ஒரு நண்பருக்கு அளித்திருந்தேன். அவர் வாசித்துவிட்டு இது மொத்தமும் மிகைப்படுத்தப்பட்டது, பொய் என்று வாதிட்டார். அவரிடம் என்ன சொல்லிப்புரியவைக்க என்று எனக்குத்தெரியவில்லை. என்னால் முடிந்தவரை ஆவணங்களைக் காட்டினேன். அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதை அவர் ஓர் இழிவு என்று நினைக்கிறார் எனத் தெரிந்துகொண்டேன்

நாம் வீட்டில் பட்டினி கிடந்தால் அதை மறைக்கிறோம். அதைப்போலத்தான் நம்மவர் இந்தப் பஞ்சம் பற்றிய செய்திகளை தங்களுக்குள்ளாகவே பேசிக்கொள்ளாமல் மறைத்துவிட்டார்கள் என்ற எண்ணம் வந்தது. பஞ்சத்திற்குக் காரணம் பிரிட்டிஷ் அரசாட்சி என்ற செய்தியையும் அவர்களால் ஏற்கமுடியவில்லை. இவ்வளவு தலைமுறை இடைவெளி வந்தபின்னாடியும் நம்மவருக்கு பிரிட்டிஷ்காரர்கள் என்றாலே நீதிமான்கள் பெரிய ஆட்சியாளர்கள் என்ற எண்ணம்தான் இருக்கிறது. அதோடு பிரிட்டிஷ் ஆட்சி சிறந்தது, அதற்குப்பின் வந்த சுதந்திர ஆட்சிதான் மோசமானது, ஊழல்நிறைந்தது என்ற எண்ணமும் பலருக்கு இருக்கிறது

வெள்ளையானையில் பிரிட்டிஷார் கொடூரமானவர்கள் என்ற சித்திரம் இருப்பதாகவும் அவர்கள் அப்படி அல்ல என்றும் ஒரு மார்க்ஸிய நண்பர் என்னிடம் பலமாக விவாதித்தார். நான் சொன்னேன். வெள்ளையானையில் மிகுந்த சமநிலையுடன் மட்டுமே வெள்ளையர் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன என்று சொன்னேன். வெள்ளையர்களில் உள்ள நீதிமான்களைப்பற்றி விரிவாகவே நாவல் பேசுகிறது. பஞ்சத்தை வெளிக்கொண்டுவந்தவர்களே மெட்ராஸ் மெயில் போன்ற நாளிதழ்களில் எழுதிய வெள்ளைக்காரர்கள்தான்

ஆனால் அவர்களின் ஆட்சியிலிருந்த இரண்டு அம்சங்கள் பஞ்சத்தை உருவாக்கின. ஒன்று அவர்களுக்கு ஏராளமான வரிவசூல் செய்யவேண்டியிருந்தது. ஆகவே இந்தியாவை ஒட்டச்சுரண்டினார்கள். அதைக்கொண்டு உலகம் முழுக்க போரை நடத்தினார்கள். இரண்டு அவர்களின் ஆட்சிமுறை என்பது சட்டம் ஒழுங்கு வரிவசூல் இரண்டையும் மட்டும் நடத்தி மிச்ச அனைத்தையும் ஃப்ராஞ்சைஸ் விட்டுவிட்டு ஒதுங்குவது. அதை விரிவாகவே வெள்ளையானை பேசுகிறது. ஆகவே இந்திய மக்கள் அவர்களால் லிட்டரலாக கைவிடப்பட்டார்கள்

பிரிட்டிஷாரின் சுரணையின்மையை மட்டுமல்ல இந்துக்களின் சுரணையின்மையையும் கடுமையாகவே பேசும் நாவல் வெள்ளையானை. நம் மனசாட்சியை நோக்கி அது பேசுகிறது. அந்தப்பேச்சைத் தவிர்க்கத்தான் நாம் சால்ஜாப்புகள் தேடுகிறோம்

சக்திவேல்

வெள்ளையானையும் வே.அலெக்ஸும்

கைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை

கொல்லும் வெள்ளை யானை

தடுமாறும் அறம்: வெள்ளை யானை

அதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை

முந்தைய கட்டுரைநித்யாவின் பெயர்
அடுத்த கட்டுரைஆகாயமிட்டாய் – கல்பற்றா நாராயணன்