நிலத்தில் படகுகள் – ஜேனிஸ் பரியத்

nilaththil-padagugal_FrontImage_428

நிலத்தில் படகுகள் ஜேனிஸ் பரியத்  – வாங்க

நிலத்தில் படகுகள் – ஜேனிஸ் பரியத்

நிலத்தில் படகுகள்

அன்புள்ள ஜெ

இந்த புத்தகவிழாவில் நான் வாங்கிய நூல்களில் உடனே படித்தநூல் ஜேனிஸ் பரியத்தின் நிலத்தில் படகுகள். ஏற்கனவே விஷ்ணுபுரம் விருதுவிழாவில் அவரை பார்த்திருக்கிறேன். இனிமையான உற்சாகமான ஆளுமை என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆகவே அந்நூலை வாசிக்கவேண்டும் என நினைத்தேன்.

மொழியாக்கம் பற்றி எழுதியிருந்தீர்கள். மிகச்சரளமான அழகான மொழியாக்கங்களாக இருந்தன இதிலுள்ள கதைகள். மொழி எந்தவகையிலும் அந்த உலகத்தைக் கற்பனைசெய்துகொள்வதற்குத் தடையாக இருக்கவில்லை. அருமையான சிறுகதைகள். வடகிழக்கின் நிலம் தொன்மங்கள் ஆகியவை நம் முன் எழுந்துவருகின்றன. ஆனால் நவீனச் சிறுகதைகளுக்குரிய கச்சிதமான ஆக்கங்கள்

டி. ரவீந்திரன்

 

அன்புள்ள ரவீந்திரன்

ஜேனிஸ் மேகாலய எழுத்தாளர் அல்ல. அவர் ஆங்கிலத்தில் எழுதும் மேகாலய எழுத்தாளர். அந்த வேறுபாடு முக்கியமானது

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

இந்த புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்களில் நிலத்தில் படகுகள் அருமையான தொகுப்பு. அற்புதமான அட்டை. கதைகள் ஒவ்வொன்றைப்பற்றியும் விரிவாக எழுதவேண்டும்.

முக்கியமாக ஒருவரை ஒரு விழாவுக்கு அழைத்ததனாலேயே இப்படி ஒரு அற்புதமான சிறுகதைத் தொகுதியைக் கொண்டுவந்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டு வந்த ஆளுமைகளுக்கும் அவ்வாறே ஒரு தொகுதி வெளிவரவேண்டும். மதுபால், அனிதா அக்னிஹோத்ரி ஆகியோரின் சிறுகதைகள் வெளிவந்தன. அவற்றை நூலாக ஆக்கலாம்

எச்.எஸ்.சிவப்பிரகாஷின் நூல்களில் ஒன்றேனும் உங்கள் நண்பர்களால் இவ்வண்ணம் கொண்டுவரப்பட்டால் நல்லது

வாழ்த்துக்களுடன்

எஸ்.சிவஞானம்

 

அன்புள்ள சிவஞானம்

எச்.எஸ்.சிவப்பிரகாஷின் நூல் வெளிவரவிருக்கிறது. நம் நண்பர் மொழியாக்கம்

ஜெ

ஜானிஸ் பரியத் – கோவை விவாதம்

முந்தைய கட்டுரைநற்றிணையில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’
அடுத்த கட்டுரைபிரபஞ்சனும் ஷாஜியும்