புதியவாசகர் சந்திப்பு – ஈரோடு

mqdefault

நண்பர் கிருஷ்ணன் [ஈரோடு] இந்த அறிவிப்பை அனுப்பியிருக்கிறார். புதிய வாசகர்களுக்கான சந்திப்பு இது. இதுவரை வராதவர்களுக்கு முன்னுரிமை. அந்த அளவுக்கு ஆர்வம் கொண்ட புதியவாசகர்கள் இருக்கிறார்களா என்று கொஞ்சம் குழப்பம்தான். இருந்தாலும் பார்க்கலாம்.

வழக்கம்போல இலக்கியம் குறித்த உரையாடல்கள். எழுதத் தொடங்குபவர்கள் தங்கள் மாதிரிப் படைப்புகளுடன் வந்தால் அவற்றைப்பற்றி விவாதிக்கலாம். இதில் எழும் முதன்மையான நம்பிக்கை சில ஆண்டுகளுக்கு முன்பு தயக்கத்துடன் இப்படி வாசகர் சந்திப்புக்கு வந்த பலர் இன்று எழுத்தாளர்கள் என்பது.

பார்ப்போம்.

ஜெ

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு அறிவிப்பு

நண்பர்களே,

இந்த வருடம் தொடர்ச்சியான  நான்காம் ஆண்டாக  விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்   சார்பாக ஒரு புதிய வாசகர் சந்திப்பை வழக்கமான ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயில்  அருகே உள்ள வழக்கறிஞர் செந்திலின் பண்ணை வீட்டில் நடத்தலாம் என உள்ளோம்.  நிகழ்வு சனிக்கிழமை காலை 10 முதல் ஞாயிறு மதியம் 1.30 வரை நடைபெறும், அங்கேயே தாங்கிக்கொள்ளலாம்.   இந்த இரண்டு நாட்களிலும் எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்து பேசலாம். அவர் சனி காலை வந்து ஞாயிறு இரவு தான் ஊர் புறப்படுகிறார். சனி இரவு நிகழ்விடத்திலேயே புதிய வாசகர்களுடன் தங்குகிறார்.  இலக்கியத்தையும் அறிவுத்துறையையும் தீவிரமாக எடுத்துக்கொள்பவர்களை இந்த சந்திப்பிற்கு வரவேற்கிறோம். சந்திப்பில் இலக்கியம், வரலாறு, தத்துவம் பற்றி பொதுவாக உரையாடல் அமையும். கடந்த ஆண்டுகளில் இது மிகுந்த பயன் அளித்ததாக சந்திப்பிற்கு வந்திருந்த வாசகர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே ஓரிரு முறை சந்தித்தவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம்.  பண்ணை வீட்டில் 20 பேர்வரை தங்கலாம் எனவே சுமார் 20 பேர்களையே ஏற்றுக்கொள்ள முடியும்.
கடந்த ஆண்டுகளில் பதிவு செய்துவிட்டு முன்னரே தகவல் அளிக்காமல் வரத்தவறியவர்கள் இதில் விண்ணப்பிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.     
 
இந்த சந்திப்பில் பங்கேற்க விரும்புபவர்கள்,
பெயர் :
வயது :
தற்போதைய ஊர் :
தொழில் :
மின்னஞ்சல்:
செல் பேசி எண் :
ஆகிய விபரங்களுடன் எனக்கொரு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் இடம் உறுதி செய்யப்பட்டவுடன் ஒரு வாரத்தில் பதில் மின்னஞ்சல் அனுப்பப்படும்.
சந்திப்பு நடைபெறும்
இடம் : ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் அருகே உள்ள பெத்தாம்பாளையத்தில் உள்ள பண்ணை வீடு.
தேதி, நேரம் : 16.2.2019 சனி காலை 10 முதல் 17.2.2019 ஞாயிறு மதியம் 1.30 வரை. 
தொடர்புக்கு:
கிருஷ்ணன், ஈரோடு.
98659 16970
சந்திரசேகரன் ,ஈரோடு
98430 26000
பாரி, பெருந்துறை
95003 84307
முந்தைய கட்டுரைஆயிரங்கால்களில் ஊர்வது
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-36