திருவையாறு

இன்றிரவு திருவையாறு செல்கிறேன். நாளையும் மறுநாளும் அங்கே இருப்பேன். நண்பர்களை சங்கீதம் படாத பாடு படுத்துகிறது. நண்பர்கள் நம்மை. இசையின் நுட்பங்களை அறிந்து கேட்கும் ரசிகன் அல்ல நான். சும்மா கேட்பதோடு சரி.கேட்டுக்கேட்டு பெரும்பாலான தியாகராஜர் பாடல்கள் அறிமுகம். பலவற்றுக்கும் பொருள் தெரியும் என்பதனால் அந்த உணர்ச்சிகள் பிடிக்கும். மரபிசையில் அவரும் புரந்தரதாசரும் எழுதிய பாடல்களே உணர்ச்சிகரமானவை. ஜெயதேவரின் அஷ்டபதி அழகானது.

மேலும் காவேரி. நிறைந்தோடும் காவேரிக்கரையில் ஓலைப்பந்தலில் நிகழும் அந்நிகழ்ச்சிக்கு என ஓரு பண்பாட்டு நீட்சி, நில அடையாளம் இருக்கிறது. இசைநிகழ்ச்சிகளுக்கும் இசை விழாவுக்கும் மிகுந்த் வேறுபாடு உண்டு. இது ஒரு வகை கொண்டாட்டம். பகல் முழுகக் எங்கிருந்தாலும் இசை காதில் விழுந்தபடியே இருக்கும். அத்துடன் ஆச்சரியங்கள். எதிர்பாராமல் யாரோ ஒரு குழந்தை நன்றாக பாடிவிடும். முக்கியமாக காவேரி குளியல்

முதல்முறையாக ஆற்றூர் ரவிவர்மாவுடன் 1989ல் அங்கே சென்றபோதே அச்சூழல் மேல் ஒரு மயக்கம் இருந்தது. அது இன்னமும் நீடிக்கிறது. இந்தமுறையாவது திருவையாறில் தங்கலாம் என முயன்றோம். முடியவில்லை. தஞ்சையில்தான்

முந்தைய கட்டுரைஉண்பேம்
அடுத்த கட்டுரைநான்காவது கொலை !!! [இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பறியும் தமிழ்த் தொடர்கதை * ]