வாசகனின் தொடக்கம்

2012-02-08 08.51.21

 

வணக்கம் ஐயா…

 

என் பெயர் கார்த்திராசு.நான் கல்லூரியில் பயிலும் மாணவன்.எனக்கு தமிழ் நாவல்களை படிக்க வேண்டும் என்று ஆர்வம்.ஆனால் எனக்கு எங்கிருந்து தொடங்க வேண்டும் என்று தெரியாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்துக்கொண்டிருக்கிறேன்.நீங்கள் எப்படி தமிழ் நாவல்களை முறையாக படிக்க வேண்டும் என்று ஒருமுறை பத்திரிக்கை ஒன்றுக்கு (தமிழ் இந்து) பேட்டி அளித்ததாக ஞாபகம்.தாங்கள் அதை கூறி நான் தமிழ் நாவல்களை முறையாக படிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

 

 

கார்த்திராசு வேல்பாண்டி

 

 

அன்புள்ள கார்த்திராசு,

 

 

ஏற்கனவே நான் விரிவாக எழுதியிருக்கிறேன். நான் எழுதிய நவீனத்தமிழ் இலக்கிய அறிமுகம் என்ற நூலில் எல்லா செய்திகளும் உள்ளன. கிழக்கு பதிப்பகத்தில் இதை வாங்கலாம்.

 

 

2000 வரை வெளிவந்த நாவல்களில் கீழ்க்கண்டவற்றை நான் இலக்கியவாசகர்களுக்காக பட்டியல்போட்டிருக்கிறேன்”

 

 

தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு

 

என்னும் இணைப்பில் நீங்கள் அதை வாசிக்கலாம். மொழியாக்கம் வழியாக தமிழுக்கு வந்துள்ள நாவல்களைப்பற்றி இந்த இணைப்பில் வாசிக்கலாம்

தேசிய புத்தக நிறுவனம் [ Nathional Book Trust ] வெள்யிட்டுள்ள முக்கியமான தமிழ் நாவல்கள்

 

 

இந்தப்பட்டியலுடன் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றால் கிடைக்கும் நூல்களை வாங்கிக்கொள்ளலாம். அல்லது நல்ல நூலகத்தில் தேடிப்பார்க்கலாம்.

 

 

ஒரு தொடக்க வாசகராக உங்களுக்கு நான் கீழ்க்கண்ட நாவல்களைச் சிபாரிசு செய்கிறேன்

 

1. அம்மா வந்தாள்தி ஜானகிராமன்

2. மானசரோவர்அசோகமித்திரன்

3. ஒரு புளியமரத்தின்கதைசுந்தர ராமசாமி

4.கிருஷ்ணப்பருந்து மாதவன்

5.சிலநேரங்களில் சில மனிதர்கள்ஜெயகாந்தன்

6 சாயாவனம்சா.கந்தசாமி

7..தலைகீழ் விகிதங்கள்நாஞ்சில்நாடன்

8. பகடையாட்டம்யுவன் சந்திரசேகர்

9 உறுபசிஎஸ்.ராமகிருஷ்ணன்

10 .இரவுஜெயமோகன்

 

 

அன்புடன்

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைபாட்டும் தொகையும் ஆவணப்படம் : கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும்