புத்தரின் வருகை

bud1

அன்புள்ள ஜெ

புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டு அன்று நாகையிலுள்ள சாமந்தான்பேட்டை என்ற மீனவ கிராமத்தில் படகுவீடுபோல் செய்யப்பட்ட ஒரு சிறு அமைப்பில் ஒரு சிறு கோவிலே கரை ஒதுங்கியதாகச் சொல்லப் பட்ட து. நேரம் வாய்க்காததால் இன்று தான் சென்று பார்த்தேன். நான்கைந்து நாட்களாக இப்பகுதையில் இதைப் பார்ப்பதற்கு நல்ல கூட்டம்.உள்ளே இருக்கும். சிலை புத்தர்சிலைபோலவே உள்ளது. எந்த பாதிப்பும் இல்லாமல் சில நெளிவுகளைத் தவிர பெரிய பாதிப்பு இல்லை.
bud2
அடியில் மிதக்கும்படி மரங்கள் டின் கள் கொண்ட அமைப்பு ஏற்ப்படுதத்தப் பட்டுள்ளது. அதில் எழு தியிருக்கும் வரிகள் ஏதோ சிங்களம் போல உள்ளது. உள்ளுர்காரர்கள் வழிபாடு நடத்த துவங்கி விட்டார் கள். மேலே உள்ள கோபுர அமைப்பு ஏதோ புத்தவிகார அமைப்பைப் போல் உளளது.
கதிரேசன்
bu3

அன்புள்ள கதிரேசன்,

அது அனேகமாக இலங்கையில் பௌத்தர்கள் வழிபட்ட ஏதாவது தெப்பமாக இருக்கும். அவர்களுக்கு அப்படி ஏதேனும் சடங்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. அலைகளில் அவ்வாறு வந்தது தற்செயல்தான்.

ஆனால் ஊழில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு எதுவும் தற்செயல் அல்ல. ஆகவே அது ஒரு நல்வரவு. அங்கே அது ஒரு வழிபாட்டிடமாக ஆகவேண்டும். பின்னாளில் பெரிய பௌத்த ஆலயமாகக்கூட மாறவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-12
அடுத்த கட்டுரைஅன்புராஜ் பேட்டி – கடிதங்கள்