பனிமனிதன் – கடிதம்

 pani-manithan-original-imadeww5533bgmfb

பனிமனித வாங்க

பனிமனிதன் மின்னூல் வாங்க

வணக்கம்,

இன்று எந்த முன் திட்டமிடலுமில்லாமல் பனிமனிதனை எடுத்துவைத்து அமர்ந்துவிட்டேன். தள்ளிப்போய்க்கொண்டே இருந்த வாசிப்பை இன்று மீண்டும் தொடங்கிவிட்டேன். பௌத்தம் சார்ந்து விரிவாக வாசிக்க வேண்டும் என்று முன்பு எண்ணியிருந்தேன், அவை இந்த வாசிப்பின் மூலம் தீவிரம் கொண்டுவிட்டன. புவியியல் சார்ந்தும் பரிணாமம் சார்ந்தும் இதில் பேசப்படும் பல செய்திகளை தேர்வுகளுக்காக முன்னரே படித்திருந்ததால் இதில் வாசிக்கும்போது அவை எளிதாகவும் மேலும் விளக்கமாகவும் துலங்கி வந்தன.

பிரடரிக் ஏங்கல்ஸின் கைகள் பற்றிய கருத்து, ஃபராய்டின் மன வகைப்பாடு, கால் யுங்கின் மன வகைப்பாடு, இந்திய ஞானிகளின் மன வகைப்பாடு குறித்தெல்லாம் அறிமுகம் செய்து கொண்டது மேலும் அதுகுறித்து வாசிக்கத் தூண்டுகிறது.

வைரம் பற்றிய விவாதம் பாண்டியன், திவாகர், கிம் மூவருக்கிடையில் வந்தபோது கிம் பௌத்தத்தின் திருஷ்ணை பற்றிக் கூறுவான். அப்போது ஒன்று நினைத்துக்கொண்டேன், நான் ஒவ்வொன்றையும் மூன்றாகப் பகுத்துக் கொள்வேன். தெரிந்து கொள்வது, புரிந்து கொள்வது, உணர்ந்து கொள்வது என. ஏதோ ஒன்றைப்பற்றி நாம் பெயரளவில் கேள்விப்பட்டது, அதைப்பற்றி மேலும் அறிந்து வைத்திருப்பது, அதுவே நம் வாழ்வில் நிகழும்போது நாம் உணர்ந்து தெளிவது எனக்கொள்ளலாம். அப்படி எடுத்துக்கொண்டால் பாண்டியன் தெரிதல் நிலை, திவாகர் பலவற்றை அறிந்திருந்தாலும் புரிதல் நிலையில் இருக்கிறார், கிம் பௌத்தத்தின் வழியில் உணர்ந்த நிலையில் இருக்கிறான் என்ற எண்ணம் தோன்றியது.

அடுத்து, இராமபித்தாகஸ் பற்றியது. இராமாயணத்தை ஆதிகாவியம் என்றும் வான்மீகியை ஆதிகவி என்றும் முன்னர் தேர்வுகளின்போது படித்திருக்கிறேன். ஆனால், இதில் இராமபித்தாகஸ் பரிணாமத்தின் படியில் நம்மிடமிருந்து விலகி வேறு படியில் நின்றிருக்கலாம், அதன் நினைவுகள் மக்களிடம் வழிவழியாக வந்து அதை வான்மீகி தன் காவியத்தில் பயன்படுத்தியிருக்கலாம் என்ற செய்தியைப் படித்ததுமே, இந்தாண்டு விஷ்ணுபுரம் விருது விழாவில் ராஜ்கௌதமனின் ஆய்வுகள் பற்றி தாங்கள் பேசிய, அகப்பாடல்களில் காணப்படும் சித்திரமும் புறப்பாடல்களில் காணப்படும் சித்திரமும் வேறுபட்டிருக்கின்றன, எனவே அகப்பாடல்கள் அதன் காலத்துக்கு முந்தைய பெருங்கற்கால நாகரிகத்தின் வாழ்வை நடித்துக்காட்டுகின்றன என்பதாக ஒரு வரியைக் கூறினீர்கள். இதை வாசித்துக் கொண்டிருக்கையில் சட்டென அந்த வரி எழுந்து வந்ததும், இராமாயணத்தில் வரக்கூடிய அனுமன், வாலி, சுக்கிரீவன், வானரங்கள் என்பவர்கள் இதுவரை அளித்து வந்த சித்திரம் முற்றிலும் மாறி வேறாகத் தெரிந்தது உண்மையில் ஒரு உளக்கிளர்ச்சியைத் தந்தது. யதி என்ற சொல்லுக்கும் மைத்ரேயர் என்ற சொல்லுக்கும் பொருள் அறிந்துகொண்டது கூடுதல் மகிழ்ச்சி.

தற்செயல்கள் எப்போதும் நல்ல பலன்களையே தருகின்றன, முன்னர் ஒரு முறை எடுத்து முடிக்காமல் விட்டிருந்தேன், இன்று தற்செயல் திட்டமாக வாசித்து முடித்தேன், மிகுந்த மகிழ்ச்சி. தற்செயலாகத்தான் தங்களை அறிந்து கொண்டேன், எதிர்மறையாக அல்ல, கவிதை சார்ந்து இணையத்தில் ஏதோ தேடி, ஆக தற்செயலுக்கும் தங்களுக்கும் நன்றிகள் பல.

இமய மலை பற்றி தற்செயலாக இன்று இதுவும் கண்ணில் பட்டது, பனிமனிதனின் நிலத்தை மேலும் துல்லியமாகக் காண உதவியது – https://youtu.be/R3VMW6fxK6Y

பேரன்புடன்

பாரதி.

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன்

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன் என்னும் கற்பனை -கடிதம்

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன் -ரெங்கசுப்ரமணி

பனிமனிதன் – சுனில்கிருஷ்ணன்

பனிமனிதன்

பனிமனிதன்

பனிமனிதன் ஒரு கடிதம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-22
அடுத்த கட்டுரையானை கடிதங்கள் – 4