விஷ்ணுபுரம் விருதுவிழா உரைகள்- கடிதங்கள்-15

DSC_0355

 

விஷ்ணுபுரம் விருதுவிழா:தேவிபாரதி உரை

விஷ்ணுபுரம் விழா: அனிதா அக்னிஹோத்ரி உரை

விஷ்ணுபுரம் விழா: மதுபால் உரை

விஷ்ணுபுரம் விருது விழா : சுனீல் கிருஷ்ணன் உரை

விஷ்ணுபுரம் விருதுவிழா:ராஜ் கௌதமன் உரை

விஷ்ணுபுரம் விழா உரை – ஜெயமோகன்

விஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம்

 

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விருதுவிழாவின் அனைத்து உரைகளுமே சிறப்பாக இருந்தன. ஒவ்வொரு உரையும் ஒவ்வொரு வண்ணம். நீங்களும் ஸ்டாலின் ராஜாங்கமும் ஆய்வாளரின் பாணியில் பேசினீர்கள். தேவிபாரதியும் சுனீல்கிருஷ்ணனும் எழுத்தாளர்களின் கோணத்தில் பேசினார்கள். ராஜ் கௌதமன் விளையாட்டும் பகடியும் கலந்து பேசினார். அவர் உடை உதிரித்தெறிப்புகளால் ஆனது. அந்தத்தெறிப்புகள் முக்கியமானவை

மதுபால், அனிதா அக்னிஹோத்ரி இருவரும் பொதுவாக இத்தகைய நிகழ்ச்சிகளின் தேவை பற்றி பேசினார்கள். நிகழ்வில் உடனிருந்து பார்த்ததுபோன்ற நிறைவை அடைதேன்

ரமேஷ் சுப்ரமணியம்

 

அன்புள்ள ஜெ

நலம்தானே? நானும் நலமே

விழாவில் நீங்களும் சுனீல்கிருஷ்ணனும் பேசியதிலிருந்த ஒற்றுமை ஆச்சரியப்படுத்தியது. சுனீல் ஒரு கிணற்றின் கதையைச் சொல்கிறார். ஒரு  வரலாற்றை அதில் புதைப்பதைப்பற்றிச் சொன்னார். ஷோபா சக்தியின் கதை அது. நீங்களும் இன்னொரு கிணற்றின்கதையைச் சொல்கிறீர்கள். அதில் வரலாறு தலைகீழாகப்புதைக்கப்பட்டிருக்கிறது

இரண்டு கதைகளும் இணைந்து ஒரு முழுமையான சித்திரத்தை அளித்தன. நீங்கள் பேசி வைத்துக்கொண்டு பேசவில்லை. ஆனால் ஒரே விஷயத்தை இரண்டுபேரும் பேசியதுபோல தோன்றியது

ஜெயராமன்

 

அன்புள்ள ஜெ

விழாவில் ஸ்டாலின் ராஜாங்கத்தின் பேச்சு ஆத்மார்த்தமானதகவும் முழுமையானதாகவும் இருந்தது. நூல்பிடித்தார்போல தன் கருத்துக்களைச் சொல்கிறார். அவருடைய பிற உரைகளையும் கேட்டேன். சிறப்பான உரையாளர் என நினைக்கிறேன். சமநிலையான பார்வையும் ஆய்வுக்கோணமும் கொண்டவராக இருக்கிறார். அவரை முன்னர் நான் அறிந்திருக்கவில்லை. இந்த விழா வழியாகவே அறிகிறேன். அவருக்கு என் வணக்கம்

ஆர். இளங்கோ

 

அன்புள்ள ஜெ

 

விஷ்ணுபுரம் விருதுவிழாவில் நான் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால் உரைகள் வழியாக அங்கே இருக்கும் உணர்வை அடைந்தேன். சுனீல்கிருஷ்ணன், ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோரின் உரைகள் சிறப்பாக இருந்தன. ஒன்று எழுத்தாளர் உரை. இன்னொன்று ஆய்வாளர் உரை. தமிழ் இலக்கியப்பரப்பில் வருங்காலத்தில் ஒளிவீசப்போகும் இரண்டு பெரிய ஆளுமைகளை அறிமுகம்செய்துகொள்ள முடிந்தது. நன்றி.

 

சித்தூர் மகாதேவன்

 

பாட்டும் தொகையும். ராஜ் கௌதமன் பற்றிய ஆவணப்படம்

ஒளிப்பதிவு இயக்கம்- கே பி வினோத்

 

முந்தைய கட்டுரைஅன்புராஜ் பேட்டி – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஒருதெய்வ வழிபாடு