மான்பூண்டியா பிள்ளை குருபூஜை

ஜெ,

முன்பு நான் எழுதியிருந்த மான்பூண்டியா பிள்ளை கட்டுரையைப் பற்றி தங்கள் தளத்தில் வெளியிட்ட சிறு குறிப்பைப் பார்த்து இன்றளவும் என் வலைப்பூவுக்கு வாசகர்கள் வருகின்றனர் என்பதால் இம் மடல்.

வரும் ஞாயிறன்று புதுக்கோட்டையில், மான்பூண்டியா பிள்ளைக்கென்று எழுப்பப்பட்ட சமாதி கோயிலில், வருடாந்திர ‘குரு பூஜை’ நடக்கிறது. 1950-களில் பழநி சுப்ரமணிய பிள்ளை எழுப்பிய கோயிலில் ஆண்டு தோரும் இந்தப் பூஜை நடந்து வருகிறது. அந்தப் பரம்பரையில் வந்த வித்வான்கள் சிலர் கூடி சிறிது நேரம் இசைப்பது வழக்கம்.

இந்தக் கோயிலுக்குப் பக்கத்திலேயே, மான்பூண்டியா பிள்ளையின் சீடரும், லயத் துறையில் இவரளவு புகழ் பெற்றவர் இல்லை என்று சொல்லும் படி வாழ்ந்தவரும் ஆன தட்சிணாமூர்த்திப் பிள்ளையின் சமாதி கோயிலும் உள்ளது. அங்கும் சிறு பூஜை நடக்கும்.

புதுக்கோட்டை அருகில் இருக்கும் உங்களது வாசகர்கள் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களை இணைத்துள்ள அறிவிப்பில் பார்க்கலாம்.

அன்புடன்
லலிதா ராம்


Ramachandran
My blog: http://carnaticmusicreview.wordpress.com/

முந்தைய கட்டுரைமெய்ஞானம் சில்லறை விற்பனை
அடுத்த கட்டுரைநாஞ்சில்நாடன் கூட்டம் மக்கள் தொலைக்காட்சியில்…