விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்

vlcsnap-error721

2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் ராஜ் கௌதமனைப்பற்றி கே.பி,வினோத் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் பாட்டும் தொகையும் என்னும் ஆவணப்படம் கோவை ராஜஸ்தானின் சங் அரங்கில் 23-12-2018 அன்று விருதுவிழா தொடங்குவதற்கு முன்பு திரையிடப்படும்

 

மாலை 530க்கு திரையிடல் தொடங்கும்

 

விஷ்ணுபுரம் விருதுபெறும் ஆளுமைகளைப்பற்றி ஓர் ஆவணப்படம் வெளியிடவேண்டும் என்னும் எண்ணம் கே.பி.வினோத் முன்வைத்தது. அப்போதுதான் என் மகன் ஒரு காமிரா வாங்கியிருந்தான் என்பதே  முதன்மையான காரணம். எங்களுக்கு எப்போதுமே நிதிக்கட்டுப்பாடு உண்டு. ஆகவே வெறும் 16000 ரூ செலவில் கே.பி.வினோத் இந்த ஆவணப்படத்தை எடுத்தார்.தொழில்முறை இசை, தொழில்முறையான படத்தொகுப்பு, ஓசைசேர்ப்பு ஆகியவற்றுடன் அனைத்து படப்பிடிப்புச் செலவையும் சேர்த்தே அவ்வளவுதான்.

 

ஞானக்கூத்தன் ஆவணப்படம் அவருக்கு மிகமிகப்பிடித்திருந்தது. அவரே பல இடங்களில் இதை காட்சிப்படுத்த ஆவன செய்தார். எழுத்தாளரின் ஆவணப்படம் எப்படி இருக்கவேண்டுமென்பதற்குச் சான்று என ஒரு கட்டுரையில் அசோகமித்திரன் இதைக் குறிப்பிட்டிருந்தார் அதன்பின் தேவதச்சன் ஆவணப்படம் எடுத்தோம்.

 

சரவணவேல் தயாரிப்பில் தேவதச்சன் ஆவணப்படம் வெளிவந்தது. செல்வேந்திரன் தயாரிப்பில் வண்ணதாசன் ஆவணப்படம் வெளிவந்தது. மலேசியா நவீன் அவர்களால்  சீ.முத்துசாமி ஆவணப்படம் எடுக்கப்பட்டது.

 

 

ஞானக்கூத்தன் ஆவணப்படம் இலைமேல் எழுத்து

இயக்கம் கே.பி,வினோத்

 

தேவதச்சன் ஆவணப்படம் நிசப்தத்தின் சப்தம்

இயக்கம் சரவணவேல்

 

 

 

 

வண்ணதாசன் ஆவணப்படம் நதியின்பாடல்

இயக்கம் செல்வேந்திரன்

 

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

சீ முத்துசாமி ஆவணப்படம் ரப்பர்விதைகளுடன் விளையாடும் கலைஞன்

இயக்கம் ம.நவீன்