அசோகமித்திரனும் ராஜம் அய்யரும்

asok
அன்புள்ள ஜெ.,
நலமா? சில மாதங்கள் முன்பு அசோகமித்திரன் அவர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் எழுதிய ஒரு கடிதத்தில் ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரத்தில் வருகிற பெரியவீடு அவருடைய தாய்வழிப் பாட்டனார் வீடு என்று எழுதியிருந்ததாகக் கூறியிருந்தேன். (‘Rajamaiyar had modeled his protagonist on my maternal grandfather’) அந்த மெயில் கிடைக்கவில்லை. நீங்கள் கூட புதிய செய்தியாக இருக்கிறது. அசோகமித்திரன் எங்கும் கூறியதாகத் தெரியவில்லை என்று கூறியிருந்தீர்கள். நேற்றுதான் சாகித்ய அகாடமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ந பிச்சமூர்த்தி பற்றி அசோகமித்திரன் எழுதிய புத்தகம் படித்தேன். அந்நூலின் அறிமுக அத்தியாயத்தில் ஜெமினி நாட்களில் ந.பி அறிமுகமானது குறித்து அவர் எழுதுகிறார்.
br
“பிச்சமூர்த்தி தவிர இன்னும் பல எழுத்தாளர்கள் கி ரா வைப் பார்க்க வருவார்கள். தனி அறையில் என் பாதுகாப்பில் இருந்த தொலைபேசி என் வயதுக்கு மீறிய மரியாதையை எனக்குக் கிடைக்கச் செய்தது. கி.ரா போன்றவர்கள் என்னைப் பன்மையில் அழைத்துப் பேசுவது எனக்குக் கூச்சத்தை அளிக்கும். பி .எஸ்.ராமையா ஒருவர்தான் ‘இவன் எங்க ஊர்ப் பையன்’ என்று உரிமையோடு பேசுவார். ஆனால் அவருடன் வரும் சி சு செல்லப்பா என்னை உறவினனாகவோ அவருடைய ஊராகிய வத்தலக்குண்டு என் தாயாரின் ஊர் என்பதாகவோ கருத மாட்டார். என் தாயார் வசித்த வீடுதான் ராஜமய்யர் எழுதிய ‘கமலாம்பாள் சரித்திர’த்தில் காணப்படும் பெரிய வீடு என்பது எனக்குப் பல ஆண்டுகள் கழித்துத் தெரிந்தது”
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
முந்தைய கட்டுரைகண்ணீரைப் பின்தொடர்தல்
அடுத்த கட்டுரையானை கடிதங்கள் – 2