அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருதுவிழா ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்துகொண்டே செல்கிறது. முதலில் முந்தையநாள் சந்திப்புகள் எளிமையாக சாதாரணமாக நடந்தன. சென்ற ஆண்டுக்கு முன் அவை முறைப்படுத்தப்பட்டன.சென்ற ஆண்டுமுதல் அவை கருத்தரங்கு போலவே நடந்தன.இவ்வாண்டு இன்னும் பெரிய அளவில் முன்னரே தயாரிக்கப்பட்டு சந்திப்புகள் நிகழ்கின்றன.
அழைக்கப்பட்டுள்ள பத்து எழுத்தாளர்களைப்பற்றிய அறிமுகக்குறிப்புகள் சுருக்கமானவை என்றாலும் ஆழமானவை. அவர்களின் பின்புலம் தனித்தன்மை பங்களிப்பு ஆகிய மூன்றும் செறிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அவர்களை வாசகர்கள் தொடர்ந்து வாசிப்பதற்கும் உதவியானவை. அவர்களில் பலரைப்பற்றி ஒட்டுமொத்தமான மதிப்பிடலே இப்போதுதான் முதல்முறையாக நிகழ்கிறது என நினைக்கிறேன்
வாழ்த்துக்கள்
கிருஷ்ணமூர்த்தி
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் விருதுவிழா பங்கேற்பாளர்களைப்பற்றிய குறிப்புக்களை வாசித்துக்கொண்டே வந்தேன். அருமையான ஓர் இலக்கிய அனுபவமாக இருந்தது அது. வெவ்வேறு இலக்கியப்பிரச்சினைகளும் இலக்கிய ஸ்கூல்களும் தெரியவந்தன. எவ்வளவு நிகழ்ந்திருக்கிறது, என்னென்ன ஸ்கூல்கள் இருக்கின்றன என்று தெரிந்துகொள்ளமுடிந்தது
ஜென் கவிதையின் மரபில் இருந்து ஒருவர் [நரன்]. முகநூல் எழுத்திலிருந்து ஒருவர் [சரவணன் சந்திரன்] வணிக எழுத்திலிருந்து ஒருவர் [சரவணக் கார்த்திகேயன்] ஆனால் என்ன ஆச்சரியமென்றால் எல்லாமே இலக்கியமாக ஆகின்றபோது அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அதெல்லாம் ஒருவகை இலக்கியச்சிறப்பியல்புகளாகவே ஆகிவிடுகின்றன என்பதுதான்.
வாழ்த்துக்கள்
எம்.சுப்ரமணியம்
=============================================================================================================
விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-1 ஸ்டாலின் ராஜாங்கம்
விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி
விஷ்ணுபுரம் விழா விருந்தினர்- 3 லீனா மணிமேகலை
விஷ்ணுபுரம் விருந்தினர் -4, எஸ் செந்தில்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்
விஷ்ணுபுரம் விருந்தினர் -6, சுனீல் கிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -7, கலைச்செல்வி
விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -8, சி.சரவணக் கார்த்திகேயன்
விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -9, நரன்