இரு தனிமைகள்

you-are-not-alone-laur-iduc

அத்தனை தீமையின் நடுவிலும்

தெய்வமைந்தன் என்றிருப்பதன் தனிமையா

அத்தனை தீமையும் என்னதே என்று

சொல்லவைத்தது உன்னை?

அனைத்தையும் சுமந்திருக்கையில் உணர்ந்திருப்பாய்

மானுடனின் மெய் என்னவென்று.

 

என் ஆசிரியனே

மானுடனில் ஒருவனாக நின்றே

என்னை ஏன் கைவிட்டீர் என்று கேட்டாய்போலும்.

 

மலையுச்சித் தனிமையில் பெருகிய சொற்கள்

இன்னொரு மலையுச்சித் தனிமையில்

ஒற்றை மன்றாட்டு என்றாயின

ஒன்று சொல்லுறுதி

ஒன்று வேண்டுதல்

ஒன்று அங்கிருந்து இங்கு வந்தது

இன்னொன்று இங்கிருந்து அங்கு சென்றது

இரண்டும் ஒன்றையொன்று நிரப்புகின்றன போலும்

 

என் வழித்துணையே

இவ்விரவில் மாமழைபோல் வீழ்க

உன் சொல்லுறுதிகள்!

ஏனென்றால் நூறாயிரம் முறை

கையில் ஏந்தி வானோக்கி காட்டிவிட்டேன்

என் மன்றாட்டை.

 

 

கடவுளின் மைந்தன்

இவ்விரவில் மௌனமாக உருகு