நிலவொளியில் -கடிதங்கள்

anita-agnihotri-3e63de95-7d6a-473c-bd30-fffe4c19f3d-resize-750

நிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி

அன்புள்ள ஜெ

 

நிலவொளியில் ஒரு அழகான சிறுகதை. நான் வாசித்தவரை அனிதா அக்னிஹோத்ரியின் கதைகள் எல்லாமே நீதியுணர்ச்சி என்னும் ஒர் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. நீதியுணர்ச்சி இரண்டுவகை. உள்ளிருந்து வருவது ஒன்று, வெளியே இருந்து கற்றுக்கொள்வது இன்னொன்று.

 

உள்ளிருந்து வரும் நீதியுணர்ச்சியே உண்மையானது. அதில் எப்போதுமே ஒரு குற்றவுணர்ச்சியும் இருக்கும். வெளியே இருந்து வரும் நீதியுணர்ச்சி பொய்யானது. ஆகவே அது பொய்யான உணர்ச்சிகளைக் கொண்டிருக்கும். வேறு எவரையாவது குற்றவாளிக்கூண்டிலே நிறுத்தும். இந்தக்கதைகள் அனைத்திலுமே கதைசொல்லிக்கு நெருக்கமான கதாபாத்திரம்தான் குற்றவாளிக்கூண்டிலே நின்றுகொண்டிருக்கிறது. ஆகவே இந்தக்கதை சிறப்பாக உள்ளது.

 

சிறில் அலெக்ஸ் அழகாக மொழியாக்கம் செய்திருக்கிறார். பேச்சுமொழியில் செய்திருப்பதனால் ஒருவர் தனக்குத்தானே அரற்றிக்கொள்வதுபோல இச்சிறுகதை அமைந்துள்ளது

 

ராமச்சந்திரன்

 

அன்புள்ள ஜெ

 

நிலவொளியில் நான் சமீபத்தில் வாசித்த சிறுகதைகளில் முக்கியமான ஒன்று. ஏராளமான செய்திகள். நகரத்தில் வறுமையும் அவமதிப்பும் சுரண்டலும் உச்சகட்டமாக உள்ளது. ஆனால் வால்மீகி சமூகத்துக்கு அவர்கல் கிராமங்களில் வாழும் வாழ்க்கையுடன் ஒப்பிட்டால் அதுவே மிகப்பெரிய விடுதலை. மிகப்பெரிய வாழ்க்கை. அந்தச்சித்திரம் அற்புதமாக இருந்தது

 

அத்தோடு அவ்வளவுபெரிய துக்கமும் நிலவொளியும் இணைவது ஆழமான உணர்ச்சியை உருவாக்கியது. நிலவொளி வேறு அர்த்தம் கொண்டுவிட்டதுபோலத் தோன்றியது

 

எம்.ராஜேந்திரன்

cy
சிறில் அலெக்ஸ்

 

அன்புள்ள ஜெ

 

நிலவொளியில் அழகான, துக்கமான சிறுகதை. நிலவொளியில் கடற்கரையில் துக்கத்துடன் அமர்ந்திருக்கும் பெண்ணின் உருவமே கடைசியில் மிஞ்சியிருந்தது. ஓரு சினிமாக்காட்சிபோல. கடலோசையை கேட்கமுடிந்தது.

 

சிறில் அலெக்ஸின் மொழிபெயர்ப்பு சிறப்பாக இருந்தது. ஒழுக்குபோல வாசிக்க்கவும் அதேசமயம் நுட்பங்களை உணரச்செய்யவும் அதனால் முடிந்தது

 

சாரங்கன்

 

முந்தைய கட்டுரைமதுபால் கதைகள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅனிதா அக்னிஹோத்ரி,மதுபால் கதைகள் -கடிதம்