வெண்முரசு நாவல்வரிசையின் இருபதாவது நூலான கார்கடல் விஷ்ணுபுரம் விருதுவிழா முடிந்தபின்னர் வெளிவரும். விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு இம்முறை வீட்டுப்பாடம் கொஞ்சம் மிகுதி. ஒவ்வொருநாளும் கட்டுரைகள், கதைகள் என தளத்தில் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. ஆகவே நண்பர்களின் வசதிக்காக விழா முடிந்தபின்னர் வெண்முரசை வெளியிடலாமென நினைக்கிறேன்
ஆகவே வரும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் இரவில் வெண்முரசு வெளிவரும்
கனைத்து அதிர்க்கும் பொங்கு கார்கடல் ஒன்றினாலே என்ற திருப்புகழ் வரி இருநாட்களாக நினைவிலாடிக்கொண்டிருந்தது. இந்நாவலுக்கு ஏன் இந்தத் தலைப்பு என்பது எழுதி முடிக்கையில்தான் எனக்கே தெரியவரும்.
ஜெயமோகன்
***