«

»


Print this Post

விஷ்ணுபுரம் விருதுவிழா(டிச 22,23)அழைப்பிதழ்


Vishnupuram A5 Invitation_B

 

2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கியவிருது பேரா ராஜ்கௌதமன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. கோவையில் 22, 23 இருநாட்கள் நிகழும் விருதுவிழாவில் இவ்விருது வழங்கப்படும்

 

கோவை, ஆர்.எஸ்.புரம்,  ராஜஸ்தானி சங்க் அரங்கில் 22 அன்று காலைமுதல் 23 மதியம் வரை தொடர்ச்சியாக இளைய தலைமுறை படைப்பாளிகளுடன் வாசகர்கள் உரையாடும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தேவிபாரதி, ஸ்டாலின் ராஜாங்கம், லீனா மணிமேகலை, சரவணன் சந்திரன், எஸ்.செந்தில்குமார், கலைச்செல்வி, சி.சரவணக்கார்த்திகேயன், நரன், சுனீல்கிருஷ்ணன், சாம்ராஜ் ஆகிய படைப்பாளிகள் பங்கெடுக்கிறார்கள்

 

23 அன்று மாலை ஆறுமணிக்கு கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் விருதுவிழா நிகழும். புகழ்பெற்ற வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி, மலையாளச் சிறுகதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர், நடிகர் மதுபால் ஆகியோர் சிறப்பு விருந்தினராக்க் கலந்துகொள்கிறார்கள்.

 

எழுத்தாளர்கள் தேவிபாரதி, ஸ்டாலின் ராஜாங்கம், சுனீல்கிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோர் ராஜ்கௌதமனை வாழ்த்திப் பேசுகிறார்கள். ராஜ்கௌதமன் ஏற்புரை வழங்குகிறார்

 

விழாவில் கே.பி.வினோத் இயக்கிய, ராஜ்கௌதமனைப்பற்றிய ஆவணப்படத்தின் சுருக்கம் திரையிடப்படும். கிழக்கு, தமிழினி, பாரதிபதிப்பகம், தன்னறம் பதிப்பகங்களின் நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும். இயற்கைத் தறிநெசவு ஆடைகளுக்கு ஓர் அரங்கும் இருக்கும்.

அனைவரும் வருக!

 

anita-agnihotri-3e63de95-7d6a-473c-bd30-fffe4c19f3d-resize-750

220px-Actor_Madhupal

 

 

 

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-1 ஸ்டாலின் ராஜாங்கம்

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்- 3 லீனா மணிமேகலை

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/116036