விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி

devi

 

 

தமிழ் புனைவுலகில் அழுத்தமான பதிவை உருவாக்கிய படைப்பாளிகளில் ஒருவர் தேவிபாரதி. பள்ளியில் கணக்கராக பணியாற்றியவர். ஆரம்பகாலத்தில் சினிமாத்துறையிலும் பணியாற்றியிருக்கிறார்

காமம், வஞ்சம், நம்பிக்கையிழப்பு போன்ற அடிப்படை உணர்ச்சிகள் மூர்க்கமாக வெளிப்படும் அடித்தள மக்களின் வாழ்க்கைப்புலம்தான் தேவிபாரதியின் களம். அவருடைய புனைவுலகின் முதல் தனித்தன்மை அது.

b

அவருடைய மானுடக்கொள்கை எதிர்மறையானது. மனிதனின் ஆன்மிகமான அகவல்லமையையோ இயல்பான நன்மைநாட்டத்தையோ நம்பாதது. அவனுடைய இருண்ட ஆழங்களை நோக்கிச் செல்லும் பார்வை கொண்டது.

 

அவருடைய மூன்றாவது தனித்தன்மை மொழிநடை. நவீனத்துவ காலகட்டத்திற்குரிய சற்றே விலகிநின்று நோக்கும், உணர்ச்சிவெளிப்பாடுகளை ஐயப்படும், புறவயமான நடை அது. அது அவர் காட்டும் மூர்க்கமான உலகை மிதமாக்கி நம்பகத்தன்மை கொண்டதாக மாற்றுகிறது. கூடவே மெல்லிய அங்கதமும் கலந்துள்ளது

a

நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ் போன்ற நாவல்கள் வழியாக தேவிபாரதி இன்றைய புனைவுச்சூழலில் அழுத்தமான பாதிப்பை உருவாக்கியிருக்கிறா. நிழலின் தனிமை வஞ்சம் ஒரு பருவிசையாக மாறி மானுட வாழ்க்கையை அர்த்தப்படுத்துவதை, அந்த அர்த்தமே வஞ்சத்தின் பொருளாக மாறி அதை நிறைவேற்றுவதைக்கூட தேவையற்றதாக ஆக்குவதைச் சொல்லும் முதன்மையான ஆக்கம். மானுடநிலையின் விந்தையை சித்தரித்துக்காட்டிய கலைப்படைப்பு

 

தேவிபாரதி இணையதளம்

 சிகரெட் புகையும் ,தபால் கார்டும்   -கிருஷ்ணன்

 

=============================================================================================================

sta

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-1 ஸ்டாலின் ராஜாங்கம்

 

முந்தைய கட்டுரைஎஸ்.ரமேசன் நாயருக்கு சாகித்ய அகாடமி விருது
அடுத்த கட்டுரைதிருவனந்தபுரம் திரைவிழா