கிருத்திகா- கடிதம்

Krithika

கிருத்திகா,சுகந்தி சுப்ரமணியம் நினைவஞ்சலி

 

கிருத்திகா:அஞ்சலி

அன்புள்ள ஜெயமாகன் சார்,

 

இன்று உங்களின் தளத்தில் சில அஞ்சலி குறிப்புகளை படித்தபோது எழுத்தாளர் கிருத்திகாவிற்கான அஞ்சலி குறிப்பை படித்தேன் . எனக்கு மிகவும் பிடித்த பெண்களின் மூன்று பெயர்களான செல்சியா, தேவி, கிருத்திகா எண்ணும் பெயர்களில் ஒரு பெயர் எழுத்தாளர் வரிசையில் உள்ளது என்பதே மிகவும் மனகிளர்ச்சியை அளித்தது. ஆனால் அவரது இயற்பெயர் மதுரம் .இனிப்பு.கிருத்திகா அவர்களின் எந்த நூல்களையும் நான் படித்ததில்லை.அவரின் பெயரையே இப்போதுதான் கேள்விபடுகிறேன். எம்.எஸ் சுவாமிநாதனை பற்றி எவ்வளோவோ,விவசாயத்தை குறித்து எழுதப்படும் மொக்கை கட்டுரைகளிலும் கண்டிருக்கிறேன்.ஆனால் அவரது மாமியார் தமிழின் ஒரு  எழுத்தாளர் என ஒரு துண்டு வரியை கூட வாசித்த நினைவு இல்லை. எம்.எஸ் சுவாமிநாதனே எங்கேயாவது அவரை பற்றி வாயை திறந்திருக்கிறரா என தெரியவில்லை.அவரது நூல்களை படிக்காமல் எதையும் கூறுவது அபத்தம். ஆனால் அவரது நூல்கள் இப்போது கிடைப்பது இல்லை என்பது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

 

கட்டுரையில் கவர்ந்த இன்னொரு பெயர் பூதப்பாண்டி. நாகர்கோவிலில் பஸ்சிற்கு காத்து நின்றிருந்த சில வேளைகளில் இந்த பெயரில் செல்லும் ஒன்றிரண்டு பஸ்களை கண்ட நினைவு. மலையாளம் மணக்கும் ஊரில் பாண்டிகாரர்களே ஒரு கிண்டல்தான் இதில் பூதப்பாண்டி வேறயா? என நினைப்பு. ஆனால் அப்போதும் ஒரு பாண்டி அங்கு வாழ்ந்திருப்பான், சிலரை கொன்று சிலரை பாதுகாத்து ஒரு வாழ்க்கை வாழ்ந்திருப்பான். நல்லவனோ கெட்டவனோ உச்சம் தொட்டவனை விலக்காத பூமியல்லவா இந்த மண்…..இல்லை வேறுகாரணங்கள் இருக்கலாம் ,இப்போது இப்படி தோன்றியது.

 

 

ஸ்டீபன்ராஜ் குலசேகரன்

 

பெண்களின் எழுத்து- தொடரும் விவாதம்

எம்.எஸ். அலையும் நினைவுகள்-2

விடுபட்டவை

குமரியின் சொல்நிலம்

அஞ்சலி மா.அரங்கநாதன்

 

முந்தைய கட்டுரைவிசும்பு [சிறுகதை]
அடுத்த கட்டுரைஒரு முதல்கடிதம்