இஸ்லாம்:கடிதங்கள்

ஜெயமோகன் அவர்களுக்கு,
 
                                  நீங்கள் திரிச்சூர் நாடக விழா பற்றி எழுதியதை படித்தேன்.  தமிழகத்தில் சமீபகாலமாக தர்ஹா செல்வது, 
சூபிகளை வனங்குவது போன்ற செயல்பாடுகள்  வெகுவாக இஸ்லாமியர்களிடம் குறைந்துள்ளது தெரிகிறது.  என் இஸ்லாமிய நண்பர்களிடம் இதுபற்றி கேட்டபோது சிறுவயதில் சென்றதாகவும்,இப்போது அது தவறென்று புரிந்துகொன்டாதாகவும் சொன்னார்கள்.  தமிழ்நாட்டில் வாழ்ந்த  சூபிகளின் பெயர்களை கூட  அவர்கள் அறிந்திருக்கவில்லை. 
 
                              ஏகத்துவம் மட்டுமே இஸ்லாம் , மற்றவை அதற்கு எதிரானவை, அழிக்கபடவேண்டியவை என்கிற பிரச்சாரம் தமிழகம் முழுமைக்கும் வேகமாக பரவிவருவதும் , அதை மக்கள் எளிதில் ஏற்பதும் தெரிகிறது.
 
                             ஏகத்துவத்திற்க்கு எதிராக தர்க்கரீதியில் சூபியிஸத்தால் வெல்லமுடியாது என்பதை அனைவரும் அறிவர். ஆனால் இந்தச் செயல்கள் மிகப்பெரிய சரித்தரப்பிழைகள் என்றே நான் என்னுகிறேன்.
தான் நம்பும் கருத்தியிலுக்கு ஓருவரால் தர்க்கரிதியில் நிச்சயமான பதில்களை தரமுடியுமென்றால் அது பயங்கரமானது.
மிகவும் வருத்தமாக இருக்கிறது என்பதை தவிர சொல்ல வேறொன்றுமில்லை. இது மாற மக்களுக்கு தேவை  ஆன்மபலம் கொண்ட ஓரு சூபியின் வருகையே.
 
 
நன்றி,
ச.சர்வோத்தமன்.
 அன்புள்ள ஜெ
இஸ்லாமியர் ஒருவர் உங்களுக்கு எழுதிய கடிதத்தை பிரசுரித்திருந்தீர்கள். அதில் மிக மறைமுகமாக விடுக்கப்பட்டிருந்த மிரட்டல்– தலையை எடுப்போம் என்ற அறைகூவல்- அதிர்ர்ச்சி அடையச்செய்தது. நாம் எந்த நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? இந்த மண்ணில் நின்றுகொணு என்ன கருத்துச் சுதந்திரத்தைபற்றிப் பேசுகிறோம்? நம் கலாச்சாரக் காவலர்கள் என்பவர்கள் இந்த தலைவெட்டி வகாபிசத்தின் மனித உரிமையைப் பாதுகாக்க அல்லும்பகலும் போராடுகிறார்கள்.
மிக வருத்தமுடன்
முந்தைய கட்டுரைநிகழ்தலின் துமி
அடுத்த கட்டுரைஅம்பைக்கு இயல் விருது