அடேய்கள்,மீம்கள் -கடிதங்கள்

 

je

 

இந்த வசையாளர்கள்-கடிதங்கள்

கீழ்மையின் சொற்கள்

இந்தத் தொலைக்காட்சிப் பேச்சாளர்கள்… கடிதம்

இந்நாட்களில்…கடிதங்கள்

இந்நாட்களில்…

அன்புள்ள ஜெ,

 

இந்த ஒரு மாசத்தில் உங்களைப்பற்றி வந்த மீம்ஸ்கள் நக்கல்கள் கிண்டல்களை ஒருவாறாக தொகுத்துப் பார்த்துவிட்டேன். என்ன ஆச்சரியம் என்றால் மிகப்பெரும்பாலானவர்களுக்கு உங்களை எந்தவகையிலும் தெரியவில்லை என்பதுதான். உங்கள் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஒற்றைவரிகளாக அறிமுகம் செய்துகொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் உங்களைப்பற்றிய வசைகளிலிருந்துதான் அந்த அறிமுகம். அதற்குமேல் ஆர்வம் இல்லை.

 

இணையத்தில் மிக அதிகமாகக் கிடைக்கும் எழுத்துக்கள் உங்களுடையவை. வெறும் ஆர்வத்தால்கூட எவரும் எட்டிப்பார்க்கவில்லை. மார்க்ஸிஸ்டுகள் பெரியாரிஸ்டுகள் இப்படித்தான் இருக்கிறார்கள். கவிதைகள் கதைகள் எழுதுபவர்கள்கூட இப்படித்தான் இருக்கிறார்கள். பெரும்பாலும் சினிமாவசனகர்த்தா என்றபேரில் உங்களை அறிந்துவைத்திருக்கிறார்கள். இணையத்தில் எழுத்தாளர்களாக உலவும் கும்பல்கள் எல்லாருமே உங்களை வசைபாடி ஒரு வரியாவது எழுதியிருந்தார்கள். அவர்களில் உங்கள் படைப்புகளை படித்தவர்கள், அல்லது எப்போதேனும் ஒருவரியாவது உங்கள் படைப்புக்களைப் பற்றி எழுதியவர்கள் எவராவது இருக்கிறார்களா என்றால் இல்லை.

 

எந்த தளத்திலும் எந்த எழுத்தாளரைப்பற்றியும் எவரும் எழுதுவதில்லை. சொல்லப்போனால் பிற எழுத்தாளர்களைப்பற்றி வாசிக்கக்கிடைக்கும் ஒரே தளம் உங்கள் வலைப்பக்கம்தான். இந்த அறியாமையிலிருந்துதான் நக்கல்கள் ஆரம்பிக்கின்றன என நினைக்கிறேன்

 

எம். ராஜேந்திரன்

 

அன்புள்ள ராஜேந்திரன்

எதையாவது படிப்பவர்கள் இந்தமாதிரி மீம் போட்டுக்கொண்டிருப்பதில்லை. இது வேறு ஒரு உலகம்.

 

ஜெ

 

*pad

 

சமஸ்கிருதம் பத்தி எங்களுக்கு எதுவுமே தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டிருக்கியா நீ? உன் இணையதளத்துலே சமஸ்கிருதம் பத்தி கலர் கலரா ரீல் விட்டிருக்கே. சமஸ்கிருதம் பார்ப்பன வந்தேறிகளின் மொழி. சமஸ்கிருதம் இல்லாட்டி இந்திய மொழிகள் வளர்ச்சி அடைந்திருக்காதா? உனக்கு ஒண்ணு தெரியுமா? சமஸ்கிருத இழவு இல்லாமலே திராவிட மொழிகள் சொந்தக் காலிலே நிக்க முடியும். மலையாளத்தையும் சேர்த்துத்தான் சொல்லுறேன். தமிழ்நாட்டிலே எப்படி தனித்தமிழ் இயக்கம் இருக்கோ அதே போல கேரளாவிலும் பச்ச மலையாளம்னு ஒரு இயக்கம் இருக்கு. உனக்கு இந்த விஷயம் தெரியுமா?

 

ஒரு மலையாளியா இருந்துக்கிட்டு, ஒரு சூத்திரனா இருந்துக்கிட்டு, பார்ப்பானுக்கும், பார்ப்பன பாஷைக்கும் வால் பிடிக்கிறியே. வெக்கமாயில்லே உனக்கு? பார்ப்பன அடிவருடியே? உனக்கெல்லாம் மனசாட்சின்னு ஒண்ணு இருக்காடா?

 

சுந்தர் கோபாலகிருஷ்ணன்

 

அன்புள்ள சுந்தர்

 

நான் எழுதிய கட்டுரைகளை வாசிக்க முயலும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

 

ஜெயமோகன்

 

முந்தைய கட்டுரைபரியேறும்பெருமாள் விழா -கடிதங்கள்
அடுத்த கட்டுரைராஜ் கௌதமன் – கடிதங்கள்