கோவை புத்தகக் கண்காட்சி விருதுகள்

IMG-20181123-WA0058

கோவை  கொடீசியா தொழில்முனைவோர் கூட்டமைப்பும் சென்னை பப்பாசி பதிப்பாளர் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி 2019 ஜூலை 19 முதல் ஜூலை 28 வரை நிகழவிருக்கிறது

வழக்கமாக ஆண்டுதோறும் ஒரு மூத்த படைப்பாளிக்கு இந்தப் புத்தகவிழாவை ஒட்டி வாழ்நாள்சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. ஒருலட்சம் ரூபாயும் விருதுச்சிற்பமும் கொண்டது இது

இவ்வாண்டுமுதல் மேலும் மூன்று இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. புனைவு, கட்டுரை,கவிதை ஆகிய மூன்று வகைமைகளில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. தலா 25000 ரூபாயும் விருதுச்சான்றிதழும் அடங்கியது இது

இவ்விருதுக்குரிய படைப்புகள் 2017,2018ல் வெளியானவையாக இருக்கவேண்டும். பரிசுபெறுவோர் 1-1-2019 அன்று நாற்பது அகவை மிகாதவர்களாக இருக்கவேண்டும். படைப்புகள் நூறு பக்கங்களுக்கு குறையாதவையாக இருக்கவேண்டும் [கவிதை நூல்களுக்கு விதிவிலக்கு]

படைப்புகளை அது தன்னால் எழுதப்பட்டது, நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்னும் தற்சான்றுடன் அனுப்பவேண்டும்.

படைப்பாளிகள் பங்கெடுக்கவேண்டுமென கோருகிறோம்

முந்தைய கட்டுரைநிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-76