நட்புக்கூடல் -கடிதங்கள் 2

IMG-20181119-WA0046

வடகேரளம்- ஒரு நண்பர்கூடல்

நட்பு- கடிதங்கள்

ஜெமோ,

 

 

“நீ வேற ஆளா இருக்கேடா. நீ வேற ஒருத்தனா இருக்கே. ரொம்ப தூரத்திலே இருக்கே” என்று பிரதீப் சொன்னான். “ஏன்?” என்றேன். “நீ வாசிச்சதும் எழுதினதும் உன் உடம்பிலேயும் இருக்கு…. அது வேறமாதிரி ஒரு சொத்து” என்றான்.

 

நெருங்கிய நண்பர்களால் மட்டுமே, இது போன்ற அவதானிப்புகளை எடுத்துரைக்க முடியும்.  இறகுகள் முழுமையாக வளர்ந்திருந்தும் பறக்க முடியாமல் தவித்திருக்கும் நிலையில் நம்மை அரவணைப்பவர்கள், அந்த இறகுகளை வளர்த்தெடுத்த அன்னையருக்குச் சமம். மிக நிறைவாக இருந்தது இப்பதிவை படிக்கும்போது.

 

அன்புடன்

முத்து

 

IMG-20181119-WA0042

சார் ,
இந்த போட்டோவில் ஒரு சுவாரஸ்யம் இருக்கு! , இதுவே தமிழகமா  இருந்திருந்தா  இந்த இரு பெண்களும் உங்க அருகில்  நிக்காம கணவருக்கு  அந்த பக்கம் நின்றிருப்பாங்க  :)

 

ராதாகிருஷ்ணன்

55

ஜெ அவர்களுக்கு

 

வணக்கம்.

 

வடகேரளம் – ஒரு நண்பர் கூடல் படித்தேன். எத்தனை தகவல்கள் அதற்குள். வரவேற்கும் நண்பர்கள் எண்ணிக்கையில் இருந்து, உள்ளூர் அரசியல், நண்பனின் அம்மாவின் நினைவாற்றல், பிரதமன் சுவை, இரவுக் களி, காலையில் படகு சவாரி, உரை, சிற்பியை சந்தித்தல் என உங்கள் நாளின் நிகழ்வனைத்தையும் நேரில் பார்த்த உணர்வு.. உங்கள் நெகிழ்வு மனநிலை எனக்கும் தொற்றியது..

 

பம்பாய் படம் வெளிவந்த புதிதில், காசர்கோடு கோட்டையைப் பார்க்கும் ஆவலில், குடும்பத்துடன் சுற்றுலா வந்தது நினைவிருக்கிறது. எத்தனை டிரெயின் மாறி, பஸ் பிடித்து வந்த பயணம். அதற்கெல்லாம் முந்தைய காலகட்டத்தில் நீங்கள் அங்கு இருந்திருக்கிறீர்கள்.. எத்தனை நினைவுகள்.. மனம் துயருற்ற பொழுதில் நாம் சந்தித்த அனைத்தும் பசுமையாய் நினைவிருக்கும் என்பது என் அனுபவம்.. உங்களுக்கும் அது தானே..

 

பவித்ரா

oyster-opera-island-resort (1)

 

அன்புள்ள ஜெ

 

மலபாரில் உங்கள் மலரும்நினைவுகள் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மகிழ்ச்சியான சிரிப்புடன் இருக்கிறீர்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அந்த மலர்ச்சி இருக்கிறது. நீங்கள் கொள்ளும் மகிழ்ச்சி எங்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதுதான்

 

வடக்குக் கேரளம் ஓர் அழகியநிலம். அங்கே தக்காணப் பீடபூமியில் உருவாகும் பல ஆறுகள் வந்து கடலில் கலக்கின்றன. தலைசேரி முதல் ஆறுகள் வந்துகொண்டே இருக்கும். அவை கடலில் சேருமிடங்களில் உள்ள அழிமுகங்களும் காயல்களும் மிக அழகானவை

 

அங்கே தங்க வாய்ப்புக் கிடைத்தது பெரிய பேறு. வெவ்வேறுவகையில் அந்த நிலம் வெண்முரசில் வருவதை காணமுடிகிறது

 

பாஸ்கர்

முந்தைய கட்டுரைரயிலில்,பிரதமன் -இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைநிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி