அன்புள்ள ஜெயமோகன்,
நான் துபாயில் இருந்தபோது என்னுடன் வேலை பார்த்த நண்பர் பிரம்மானந்தனுக்கு நண்பராக இருந்தவர். பலமுறை தொடர்ந்து அவரைப் பற்றிப் பேசியிருக்கிறார். பிரம்மானந்தன் எப்படி குடியால் சீரழிந்தார் என்பதைப் பற்றி ஓயாமல் சொல்லிக்கொண்டே இருந்தார். என் நண்பரும் ஓயாமல் குடிக்கக்கூடியவர். அவரது குற்ற உணர்ச்சியை பிரம்மானந்தத்தைப் பற்றிப் பேசுவதன்மூலம் தீர்த்துக்கொள்கிறார் என நினைத்துக்கொள்வேன்.
பிரம்மானந்தன் தமிழில் பாடிய மறக்கமுடியாத பாட்டு – மெட்டி படத்தில் வரும் ‘சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் இன்பக் கனவுகளே’ பாடல்.
இளையாராஜா ரசிகர் ஒவ்வொருவரும் ஆழமனதில் இருந்து ரசிக்கும் பாடலாக இது இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் பாடல் கேட்கும்போதே எனக்குள் ஏதோ ஓர் அலை அடிப்பதை உணர்ந்திருக்கிறேன். இன்றும் அதையே உணர்ந்தேன்.
இந்தப் பாடலின் ஒலிவடிவத்தை மட்டும் யூ டியூப்பில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். (நான் சரியாகத் தேடவில்லை என்பதும் உண்மையே.)
அதன் லிங்க்:http://www.youtube.com/watch?v=1l19w9-09Ak
–ஹரன் பிரசன்னா
பிரம்மானந்தன் விக்கி