தேங்காய் எண்ணை -கனவு- கடிதம்

coco

தேங்காயெண்ணையும் வெள்ளையரும்

 

மதிப்புகுரிய ஜயமோகன் அவர்களுக்கு,

 

எனது தேங்காய் எண்ணை சம்பந்தப்பட்ட கடிதத்திற்கு விளக்கமளித்ததற்கு மிக்க நன்றி.

 

எனக்கேற்பட்ட அனுபவம் ஒரு விசித்திரக் கனவுதான்.கேரளாவில் ஒருசெக்கெண்ணைச்சாலையில் நான் நிற்கிறேன். ஒரு சிறு பையன் -, அவனது நிறம் வெள்ளை சேர்ந்த பழுப்பு,தலைமயிர் மஞ்சள்- ஆக, அவன் கேரளாவைச்சேர்ந்த கலப்பினன் என எனது மனம்அப்போது கூறியது.அவன் எனக்குமுன் செக்கெண்ணைக் குடுவை ஒன்றை நீட்டுகிறான்.எனது நாசி வழியே அந்த புதிய எண்ணை மணம் செல்கிறது….

 

இங்கு முக்கிமானது என்னவென்றால், அப்பையன் எனக்குப் மிகவும் பரிச்சயமானவன். (ஆனால் அது இப்பிறவியில் அல்ல). எனக்கு அடிக்கடி ஏற்படும் கனவுகள் கேரளாப்பகுதிகளிலேயேதான்…… ஒருமுறை எனது கனவொன்றில் ஆங்கில/, போர்ச்சுகீய ஏகாதிபத்தியத்திற்கெதிராகப்போரிட்ட விடுதலைப் போராளிகள் சிலரை அரசு தூக்கில் இடும் காட்சியை கண்டேன். எனது முதல் பயணம் 2007ல் ஆனபோதிலும்,சிறுவயதிலிருந்து கேரளாபற்றிய ஆர்வம் அதீதமாக உண்டு……..

 

அன்புடன்,

 

மைத்ரேயி

 

அன்புள்ள மைத்ரேயி

 

முன்பெல்லாம் இத்தகைய கனவுகளை உளவியலின் தர்க்கங்களைக்கொண்டு விளக்கமுயல்வேன். அது அபத்தம் என்னும் இடத்துக்கு வந்துசேர்ந்திருக்கிறேன். இதிலுள்ள வசீகரமான ஆழத்தை இல்லாமலாக்கி, எளிமைப்படுத்துவதுதான் அது. அந்த ஆழம் மானுடரை மீறியது. நாம் ஒவ்வொருவருக்குள்ளும் உறையும் தனி மூளையின் எல்லைகளுக்கு அப்பால் நின்றிருப்பது

 

ஜெ

முந்தைய கட்டுரைநட்பு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசமூகவலைச்சூழலெனும் மலினப்பெருக்கு…