கண்டராதித்தனுக்கு விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது அளித்த விழாவின்போதுதான் இறுதியாக வே.பாபுவை பார்த்தேன். அவரும் வே.நி.சூர்யாவும் கண்டராதித்தனின் புதிய கவிதைநூல்களுடன் வந்திருந்தார்கள்.
தக்கை பாபு என அழைக்கப்பட்ட வே பாபு கவிதைகளை தக்கை என்னும் பதிப்பகம் வழியாக வெளியிட்டிருக்கிறார். கவிதைக்கான ஒருங்குகூடல்களை ஏற்பாடு செய்திருக்கிறார். சேலத்தைச் சேர்ந்தவர்
தங்கள் வாழ்க்கையின் அந்தரங்கமான ஒரு பகுதியை கவிதைக்காக ஒதுக்கிக் கொண்டவர்கள், வாழ்க்கையின் பலவகை அல்லல்களுக்கு நடுவே அதை ஒரு ஒரு தனியான பயணமாகக் கொண்டுசென்றவர்கள் எப்போதும் தமிழில் உண்டு. வே.பாபு அத்தகைய அரிதான சிலரில் ஒருவர்
வே.பாபுவுக்கு அஞ்சலி
வே பாபு கவிதைகள்- கீற்று
கோர்ட் சித்திரங்கள்