உணவும் உடலும்

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு… தங்களின் தளத்தில் வெளியிடப்படும் உணவு தொடர்பான விவாதங்களை தொடர்ந்து கவனித்துவருகின்றேன். எனவே சமீபத்தில் காண நேர்ந்த உனவு குறித்தான ஒரு காணொளியை இங்கு பகிர்ந்துகொள்ள எண்ணுகின்றேன்.

ரான் சேகல் என்பவர் TEDx Rubbianல் “What’s the best diet for humans” என்ற தலைப்பில் உணவு குறித்தான தன்ஆய்வுகள் குறித்து பேசியது. இணைப்பு இங்கே:

die

ரான் உணவின் தன்மையை ரத்ததின் குளுகோஸ் அளவுகளை கவனிப்பதன் மூலம் தீர்மானிக்கலாம்என்கிறார். அதிகமான குளுகோஸ் அளவுகள் வெகு விரைவில் பசியை உண்டக்கும். எனவே மீண்டும்அதிகமான உணவு, அதிக குளுகோஸ் அளவுகள் = உடல் பருமன் மற்றும் சர்க்கரை வியாதி.

இதில் சுவராசியமான விஷயம் ஒரே உணவு ஒருவருக்கு குளுக்கோஸ் அளவுகளை அதிகரிப்பதாகவும், இன்னொருவருக்கு குறைப்பதாகவும் இருப்பது தான். மேலும் இந்த குளுக்கோஸ் அளவு விஷயத்தில், நம்வயிற்றில் இருக்கும் ‘கட்’ பேக்டீரியாக்களும் ஒரு முக்கியமான பங்கு வகின்றதாம். நாம் உண்ணும்உணவின் தன்மை இந்த பேக்டீரியாக்களின் ஜீன்களினை மாற்றுவதற்க்கு கூட வாய்ப்புகள் உண்டு.

அதாவது பொதுவான டய்ட் என்று எதுவும் இல்லை. அவரவர் உடல்வாகை பொருத்து ஒரு உணவுகொழுப்பாக சேகரம் ஆவதும் ஆகாததும் என்கிறார்.

ரானின் அமைப்பு thepersonalizeddiet.com என்ற வலைமனையில் இது குறித்தான ஆலோசனைகளை வழங்கிவருகின்றது. யார் வேண்டுமானலும் உறுப்பினராக பதிவு செய்துகொள்ளலாம்.

பி ஏ பிரவீன்

முந்தைய கட்டுரைபிரதமன் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவடகேரளம்- ஒரு நண்பர்கூடல்