வெள்ளையானையும் உலோகமும்

vellai

இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சங்களை இருவகையாக பிரிக்ககலாம் .ஒன்று இயற்கையாக ஏற்பட்ட பஞ்சம் மற்றொன்று செயற்கையாக  ஏற்படுத்தப்பட்ட பஞ்சம்.முதலாவதைவிட இரண்டாவது பஞ்சம் கொடியது மக்கள் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருந்தபோது  டண் கணக்கில் உணவு தாணியங்க்கள்  ரயில்களிலும் கப்பல்களிலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிக்கொண்டிருந்தது. பஞ்ச காலத்தில் உணவில்லாமல் நொடித்து இறந்து போனவர்கள் நிறையபேர் என்றால் பஞ்ச காலங்க்களில் கொள்ளை லாபம் கொய்து  பணக்காரர்கள் ஆனவர்கள் பலர்.

எந்த ஒரு சமூக நிகழ்வாயிருந்தாலும் முதலில் பாதிக்கப்படுபவர்கள் எளியமக்கள் தான் பஞ்சத்திலும் அதுவே தான் நடக்கிறது. ஒரு கவளை உணவை நினைத்து ஏங்கி அதுவே நினைப்பாகி இத்து இருகிப்போய் மண்ணில் மாய்ந்துபோனவர்கள்.தமிழ் நாட்டின் ஏன் இந்தியாவின் மிகப்பெறிய கட்டிடங்க்களையும் அணைக்கட்டுகளையும் பார்த்து வியக்கும்போது அது அது காவு வாங்கிய உயிர்களை எண்ணிப்பார்க்க இந்நாவல் நம்மை தூண்டுகிறது.இந்தியாவில்ஆட்சி செய்த ஆட்சியாளர்களில் பெரும்பாலனாவர்கள் இடைநிலைச் சாதிகள். பிராமணர்களின் சாதி அமைப்பு மூலம் அவர்கள் எளிய மக்களை அடக்கி ஒடுக்கினார்கள் அதற்காக பிராமாணர்கள் ஈராயிரம் வருடங்க்களாக உயர் பீடத்தில் அமரவைக்கப்பட்டார்கள். இன்று பிராமணர் மீது காட்டப்படும் வெறுப்பின் சிறிதளவைக்கூட இடைநிலச்சாதிகளிடம் காட்ட முடிவதில்லை.

ஏய்டன் மீண்டும் மீண்டும் அவர்களோடு முட்டி தோற்கிறான். கடைசியில்  தன்னை அழித்துகொள்ள முயல்கிறான்.பஞ்சத்தை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் ஜெயமோகன். இந்தியாவை  எவ்வளவு முயன்றாலும் புரிந்து கொள்ள முடியாது.ஆகவே ஆட்சியாளர்கள் ஆட்சிசெய்யும்போது அதன் நிர்வாகத்தில் ஏற்படும் பிரச்சனகளை மட்டும் தீர்த்தால் போதும் என நினைக்கிறார்கள்.இன்று வரையில் ஆட்சியாளர்கள் அதுதான் செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களால் அதுதான் செய்ய முடியும்.சுற்றுலாத்தலமாகவும் விவேகானந்தர் தங்க்கியிருந்த இடமாகவும் அறியப்பட்ட ஐஸ் ஹவுஸ் இதோ மீண்டுமொருமுறை அங்கு நடந்த இந்தியாவின் முதல் தொளிலாளர் போரட்டத்திற்காக அறியப்படுகிறது. ஐஸ் ஹவுசிற்குள் உறைந்து போய்கிடந்த ஒரு பெருந்துயர வராலாற்றை ஜெயமோகன் உருக்கி வெள்ளையானையாய்  வடித்து தந்திருக்கிறார்.

அன்புடன்

கதிரேசன்

***

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம், என் கணவர் உங்களின் எழுத்திற்கு தீவிர வாசகர் ,உங்களின் வெண்முரசினை படித்துக்கொண்டிருக்கிறார், நான் இப்பொழுதுதான் விட்ட வாசிப்பினை தொடங்கியிருக்கிறேன், உங்களுடைய உலோகம் படித்துக்கொண்டிருக்கிறேன், என் கணவர் உலோகம் படித்துவிட்டு பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் என் மகளை படிக்கசொல்லியிருந்தார், அவளும் தேடி தேடி படிக்கும் ரகம். அதை படித்த அவள் அவளுக்கு தெரிந்த வகையில் கதை பற்றிய தன் கருத்தை பதிவிட்டிருக்கிறாள், அதனை உங்கள் பார்வைக்காக இங்கு பகிர்ந்துள்ளேன்,

https://www.youtube.com/watch?v=ECgyDMWBy4w&t=6s

நன்றி.

அன்புடன்,

இந்துமதி.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-71
அடுத்த கட்டுரைரயிலில் -கடிதங்கள்-4