திராவிட இயக்கம் ஒரு கடிதம்

cn

 

அன்புள்ள ஜெ…

 

ஒரு கட்டுரையில் இப்படி சொல்லி இருக்கிறீர்கள்

 

—தமிழகத்தில் அறிவார்ந்த அடிப்படை இல்லாத பரப்பியக்கமான திராவிட இயக்கம் அதை அறிவுபூர்வமாக ஆராய்வதை எல்லா வகையிலும் தடுத்துவிட்டது —

 

இது எப்படி இருக்கிறது என்றால் வட கொரியாவில் இப்போது நடக்கும் கம்யூனிஸ்ட் ஆட்சி அடிப்படையில் அல்லது சில நாடிகளில் சில சர்வாதிரிகள் நடத்திய படுகொலைகள் அடிப்படையில்

கம்யூனிஸ்ட் இயக்கமே வன்முறை இயக்கம் என் சொல்வதைப் போல உள்ளது

 

கம்யூனிஸ்ட் இயக்கம் குறித்து சொல்வதாக இருந்தால் கம்யூனிச சித்தாத்தங்களை உருவாக்கியவர்கள் , உண்மையான கம்யூனிச ஆட்சியை நடத்தியவர்கள் ஆகீயோரை வைத்துதானே விவாதிக்க வேண்டும்.

 

அதேபோல ஆன்மிக விவாதம் என்றால் சில தனிப்பட்டவர்களின் குறைகளை சுட்டிக்காட்டி ஆன்மிகம் என்பதே தவறு என சொல்வதும் பிழை அல்லவா

 

ஆனால் நீங்கள் கம்யூனிசம் குறித்து பேசுகையில் இந்த தெளிவுடன் பேசுகிறீர்கள்… முரணியக்கம் , மூலதனம் , உபரி மதிப்பு  , நிலை மறுத்தல்  நிலை மறுத்தலை நிலை மறுத்தல் என்றெல்லாம் ஆக்கப்பூர்வமாக பேசுகிறீர்கள்

 

ஆனால் திராவிட இயக்கம் என வரும்போது திமுகவின் தவறுகளை அல்லது சில லெட்டர்பேட் அமைப்புகளின் தவறுகளை திராவிட இயக்கத்தின் தவ்றாக சித்திரிக்கிறீர்கள்

 

கம்யூனிஸ்ட் இயக்கம் பற்றி பேச வேண்டுமானால் எப்படி மூலதனம் நூலை அடிப்படையாக கொண்டு விவாதிக்க வேண்டுமா அதுபோல திராவிட இயக்கம் குறித்து விவாதிக்க வேண்டுமென்றால் எம் ஜி ஆரின்

 

அண்ணாயிசம் என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டே பேச வேண்டும்.

 

தன் திரைப்படங்கள் மூலம் திமுக கொடியை மக்கள் மனதில் பதிய வைத்தவர் எம் ஜி ஆர்

 

அண்ணாவுமே கூட எம் ஜி ஆரின் செல்வாக்கை அங்கீகரித்தவர்.. மதித்தவர்

 

திமுக வென்றதும் தனக்கு மாலை அணிவிக்க வந்தவர்களிடம் , மாலைக்கு தகுதியாவனர் எம் ஜி ஆர் என்று சொன்னவர் அண்ணா அவர்கள்

 

அண்ணாவின் மறைவுக்கு பின் , திமுகவின் பெருந்தலைவர்களைவிட கலைஞர் தான் விரும்பியபடி ஆட்சி அமைப்பார் என நினைத்து அவரை முதல்வராக்கினார்…

ஆனால் தான் விரும்பிய அண்ணாயிசம் அந்த ஆட்சியில் செயல்படுத்தப்படவில்லை என நினைத்து அ இ அ தி மு க என்ற கட்சி துவங்கி ஆட்சி அமைத்தார்

 

இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியது , சத்துணவு திட்டம் என அண்ணாயிச அடிப்படையில் ஆட்சி நடத்தினார்..  ஆளும் கட்சி ஒன்று அடுத்த தேர்தலில் வெற்றி பெறுதல் என்ற சாதனையை அவரால் மட்டுமே செய்ய முடிந்தது ( பிறகு ஜெயலலலிதா இதை செய்தார் )

 

அறிவியக்கம் என்பதில் அவர் பெரிய ஈடுபாடு கொண்டிருந்தார்,,,, சொல்லபோனால் அவர் கலைஞரே முதல்வராக்கியதேகூட கலைஞரின் தமிழுக்காகத்தான்..

 

ஒரு மேடையில் உரையாற்றுகையில் சொன்னார் –    நான் பேசும்போது இவ்வளவு அமைதியாக கேட்கிறீர்களே… இதே அமைதியுடன் கவனத்துடன் என் முன் பேசிய கல்வியாளர்கள் பேசிய பேச்சைக் கேட்டு இருந்தால் , பல விஷ்யங்களை கற்று இருப்பீர்கள் “ என்றார்

 

தான் படிக்காதவன் என்ற ஏக்கம் அவரிடம் இருந்தது… எனவேதான் மற்றவர்கள் படிக்க வேண்டும் என உளமாற விரும்பினார்… திமுகவின் கடும் எதிர்ப்பையும் மீறி சத்துணவு திட்டம் கொண்டு வந்தார்.

 

அவர் ஆட்சியில்தான் எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய மதிப்பு வழங்கப்பட்டட்து   தன்னை மோசமாக விமர்சித்த கண்ணாதாசனை அரசவைக் கவிஞர் ஆக்கினார்,,, அவருக்கு தேவைப்படுவதை அவ்வபோது செய்து கொடுத்தார்

 

 

உண்மையில் , இன்று அவர் ஆட்சி இருந்திருந்தால் , அண்ணாயிச அடிப்படையில் திராவிட ஆட்சி நடந்து கொண்டிருந்தால் அறிவியக்கம் மிகப்பெரிய வீச்சுடன் இயங்கி கொண்டு இருந்திருக்கும்…

 

 

உங்களுக்கு தெரியாதது அல்ல… கிராமங்களில் பல நூலகங்கள் அடிப்படை வசதிகூட இல்லாமல்  இருக்கின்றன்., புததகம் வைக்கும் மர ரேக் இல்லாமல் , தரையில் புத்தகங்களை குவித்து வைத்துள்ளர்,,, பலவற்றில் புதிதாக நூல்கள் வாங்கப்படுவதே இல்லை

 

 

அந்த நிதி ஆதாரங்களையும் திரட்டி சென்னையில் பிரமாண்டமான நூலகம் கட்டியது திமுக அரசு… எம் ஜி ஆராக இருந்தால்  இந்த நிதி ஆதாரத்த்தை கிராமங்களுக்கும் ,  விளிம்பு நிலை மக்களுக்குமே பயன்படுத்தி இருப்பார்

 

இதனால்தான் இன்றும் அவரது வாக்கு வங்கி அப்படியே உள்ளது…     திமுகவோ கூட்டணியால் மட்டுமே அவ்வப்போது வெல்லும் கட்சியாக இருக்கிறது

 

 

ஆகவே திராவிட இயக்கம் என்பதன் மீது உங்கள் வருத்தம் சரியானது அல்ல…

 

 

போதுமான நெகிழ்வுத்த்ன்மையுடன் ஜன நாயக அடிப்படயுடன் காலத்துக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு வருகிறது திராவிட இயக்கம்.

 

ஆரம்ப கட்டத்தில் அப்போதிருந்த அறியாமையை அக்ற்ற மிக கடுமையாக பெரியார் செயல்பட்டார்… அதன் பின் சற்று அறிவார்ந்த பாணியில் அண்ணா செயல்பட்டார்.. அதன் பின் நடைமுறை சார்ந்து எம் ஜி ஆர் செயல்பட்டார்..

 

மற்ற கட்சியினர் மற்றவர்கள் செய்யும் தவறுக்கான பழிகளை திராவிட இயக்கத்தின் மீது போடுவது சரியல்ல

 

அன்புடன்

 

பிச்சைக்காரன்

முந்தைய கட்டுரைராஜ் கௌதமனின் அயோத்திதாசர் ஆய்வுகள்- சுனீல் கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைமலினப்பெருக்கு, மீம்ஸ் கலாச்சாரம்- கடிதங்கள்