இணையத்தில் நியூஸ் 18 தொலைக்காட்சியில் பாக்யராஜின் அரை மணி நேரத்திற்கு மேல் ஓடக்கூடிய பேட்டியை பார்த்தேன். கதை திருட்டு ஏதுமில்லை எனவும் அவ்வாறு யாரும் தன்னிடம் சொல்லவில்லை எனவும் இரண்டு கதைகளும் ஒரே போல உள்ளதால் அதற்கு அங்கீகாரம் வேண்டும் என தான் கேட்டதாகவும் சொல்கிறார்.
அதேபோல முருகதாஸ் இப்படி ஒரு கதை முன்பே உள்ளது உள்ளது என்பதை தெரிந்துகொண்டு அதை பார்த்து படத்திற்கு திரைக்கதை அமைத்ததாக தான் சொல்ல வில்லை என்கிற தொனியிலும் பேசுகிறார்.
இணையவெளியில் எப்பொழுது கீழே விழுவார் என மிக அதிகமாக எதிர்பார்க்கப்படும் நபர்களின் பட்டியல் உண்டென்றால் அந்த வரிசையில் முதலிடம் உங்களுக்குதான். இந்த எதிர்பார்ப்பு உங்களை கீழே தள்ளவும் செய்கிறது.
குறிப்பாக இந்த சமூக வலைதளங்கள் அதாவது முகநூல் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவை வந்த பிறகு ஓரிரு நாள் காத்திருக்கலாமே என்கிற பொறுமையும் இல்லை, அதேசமயம் ஒன்றுக்கு மேற்பட்ட முகங்களை சூடிக் கொள்பவர்களாகவும் இந்த இணையம் அனைவரையும் மாற்றிவிட்டது. மேலும் தன்னை நேர்மையாளன், நடுநிலையானவன், அடிவருடி அல்ல என காண்பிக்க வேண்டிய கண்ணுக்குத் தெரியாத கட்டாயம் ஒரு வாசகனின் முதுகில் வந்து அழுத்துகிறது. ஆகவே இந்த வசை.
உயர்ந்தவர்கள் சினிமா அரசியல் என வரக்கூடாது, வந்துவிட்டால் இதுபோன்ற அபாண்டங்களை சந்தித்தே தீர வேண்டும்.
கிருஷ்ணன்
https://tamil.news18.com/
அன்புள்ள கிருஷ்ணன்
உண்மைதான். இது நான் சினிமாவுக்குக் கொடுக்கும் விலை மட்டும் அல்ல.
வெளிப்படையான திட்டவட்டமான கருத்துக்கள் கொண்டிருப்பதற்காக, நேர்மைக்காக, உரிய தருணங்களில் துணிந்து தனித்து நிற்பதற்காக கொடுக்கும் விலை
ஜெ