சர்க்கார், இறுதியாக…

sa

ஜெ

உடனே உங்கள் வழக்கமான எதிரிகள் தாண்டிக்குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே இதை எழுதுகிறேன். இப்போதுள்ள சூழலில் சர்க்கார் படத்தின் கதை, திரைக்கதை எவருடையது? உங்கள் பங்களிப்பு என்ன?

வெற்றிச்செல்வன்

***

அன்புள்ள வெற்றிச்செல்வன்,

நான் ஏற்கனவே சொன்னதுதான். நான் நேரில் அமர்ந்து பார்த்ததன் அடிப்படையில் அதன் கதை,திரைக்கதை ஏ.ஆர்.முருகதாஸுடையது. அது ஒற்றைவரியிலிருந்து திரைக்கதையானபோது நான் உடனிருந்தேன். ஆகவே அதைப் பதிவுசெய்வது என் கடமை என நினைத்தேன்

கதை உருவாக்கத்தில் அவருடன் நான்கு உதவியாளர்கள் உதவினார்கள், ஒருவர் ஏற்கனவே மான்கராத்தே படம் இயக்கிய திருக்குமரன்,  இன்னொருவர் என் நண்பரும்  வத்திக்குச்சி பட இயக்குநருமான கிங்க்ஸ்லின். என் பணி அது திரைக்கதைக்குரிய ஓட்டத்துடன் அமைகிறதா, சிதறிச்செல்கிறதா என்று பார்ப்பதும், காட்சிகளுக்கு அவற்றுக்குரிய வசன வடிவை அமைப்பதும் மட்டுமே. எல்லா படங்களிலும் என் பணி அவ்வளவுதான்.

ஜெ

முந்தைய கட்டுரைசர்கார்- இறுதியில்…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-52