கட்டண உரை –ஓர் எண்ணம்
கட்டண உரை-அறிவிப்பு
அன்புள்ள ஜெ
கட்டணம் செலுத்தி நேரலையாக உரையை கேட்கும் வசதியை தரலாம் பலருக்கு பயன் உள்ளதாக இருக்கும் . இதற்க்கான சேவையை தரும் இணையதள சேவை நிறுவனங்கள் உள்ளன .
இத்தகைய உரைகளை தனி தொகுதியாக மாற்றி கட்டணம் செலுத்தி அவற்றை பார்க்கும் கேட்கும் வசதியை தரலாம் அதற்க்கான இணைப்பை உங்கள் இனைய தலத்தில் பார்வைக்கு வைக்கலாம் புத்தகங்களை போல
தக்ஷிணாமூர்த்தி
அன்புள்ள தக்ஷிணாமூர்த்தி அவர்களுக்கு
உரைகளை அப்படி இணையத்தில் கட்டணவடிவில் ஏற்றமுடியாது. பணம் பெறுவதற்கான இணைய அமைப்பை உருவாக்குவது எளிதல்ல. இந்தியச்சட்டங்கள் கோரும் பல்வேறு விதிகளை நிறைவேற்றுவது பெரும்பணி. இணையம் பெரும்பாலும் இன்றுவரை இலவசமாகவே செயல்படுவதன் முதன்மையான காரணம் இதுவே.
ஜெ
|
Mon, Oct 29, 1:19 PM (18 hours ago) | |||
|
அன்புநிறை ஜெ,
தங்கள் இயலாமை புரிகிறது. நான் முடிந்தவரை விடுமுறைக்கு முயற்சி செய்து வரப்பார்க்கிறேன். வர இயலவில்லை என்றால் கட்டண உரைக்கான பணம் செலுத்தி கானொலியை மட்டும் பெற்றுக்கொள்ள இயலுமா? அவ்வாறெனில் நான் கட்டணம் செலுத்தி கானொலி பெற சித்தமாகயிருக்கிறேன்.
நேற்றைய சேலம் கூட்டத்தில் தங்களின் உரை கானொலியாக கிடைக்குமென்றால் அதற்கான இணைப்பை தெரியப்படுத்த வேண்டுகிறேன். இல்லையெனில் தங்கள் உரையின் சாராம்சம் மற்றும் முக்கிய விவரங்களை தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
அன்புடன்
ரா. பாலசுந்தர்
அன்புள்ள பாலசுந்தர்
எல்லா உரைகளும் இணையத்தில் வரும் என்று சொல்லிவிடமுடியாது. சேலம் உரை பதிவுசெய்யப்படவில்லை என நினைக்கிறேன்
ஜெ