அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
ஒரு கேள்வி, நானும் என் 2 நண்பர்களும் நேற்று த்ரிசூர் வடக்குநாதன் ஆலயம் சென்றோம். ஆலயம் வாசலில் ஹிந்து அல்லாதவற்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை என்னும் அறிவிப்பு பலகையை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் தமிழகத்தின் சிலபல கோவில்களுக்கு சென்றவன், எங்கும் இந்த தடை கண்டதில்லை. சட்டை அணிய கூடாது போன்ற சில விதிமுறைகள் இருக்கும், அதை கடைபிடித்தே செல்வது வழக்கம். பெரிய கோவில்கள் தரும் அமைதி எனக்கு மிகவும் உவப்பானவை. கோவில் வாசல் வரை சென்று திரும்பி வந்தோம். நண்பர்கள் இருவரும் கிறிஸ்தவர்கள், நான் நாத்திகன் (தி.க விதண்டாவாதிகளில் நான் ஒருவன் அல்ல). எனக்கு இப்படி ஒரு அனுபவம் முதல் முறை. பெரும் மன உளைச்சலை அளித்தது. மேலும் மனக்குழப்பம் என்னை ஆட்கொனுள்ளது. ஹிந்து மதம் குறித்து நீங்கள் எழுதியுள்ள பல கட்டுரைகளை படித்துள்ளேன். அதனாலேயே இந்த தடை பெரும் அதிர்ச்சி. அதனால் இந்த தடைக்கு உள்ள காரணம் அறியவே (கோவில் செல்ல உளமார விருப்பத்துடன்) இந்த கடிதம் எழுதுகிறேன்.
வடக்குநாதன் ஆலயம் செல்வதற்கு முன் த்ரிசூரின் மிக பெரிய கிறிஸ்தவ ஆலயம் (புத்தன் பள்ளி) சென்றோம், அங்கு எந்த தடையும் இல்லை. மிக அமைதியான ஆலயம். சென்று சற்று நேரம் அமர்ந்து வந்தேன்.
கேள்வி : இந்த தடைக்கான காரணம் ? நான் அங்கு செல்லலாமா ?
இப்படிக்கு,
அருள், கருங்கல்.
***
அன்புள்ள அருள்
ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா?
இதைப்பற்றி நான் முன்னரே எழுதிய கட்டுரையின் சுட்டி இது
ஜெ
***
https://ritabanerjisblog.wordpress.com/2018/02/22/on-gandhis-sexual-abuse-of-girls-in-his-ashram
இந்த பதிவை படித்தவுடன் மனம் நொந்து போனேன்.இது உணமெய்யா இல்லை பொய்யா. உங்கள் கருத்து என்ன.
நன்றி.
வீரா விக்ரம்
***
அன்புள்ள விக்ரம்
முன்னரே நான் இதைப்பற்றி எழுதியவற்றின் சுட்டிகள் இவை
ஜெ