அஞ்சலி :யுகமாயினி சித்தன்

sithan

 

கோவையிலிருந்து யுகமாயினி என்னும் சிற்றிதழை நடத்திய சித்தன்  [சித்தன் பிரசாத்]  அவர்கள் காலமானார் என்னும் செய்தி அறிந்தேன். இடதுசாரிப் பார்வை கொண்டவர். கோவை ஞானி அவர்களுக்கு அணுக்கமானவர். எஸ்.பொன்னுத்துரை அவர்களுக்கும் அணுக்கமானவராக இருந்தார்.

 

இடதுசாரி நோக்குகளுடன் எழுதவரும் இளைஞர்களுக்கான களமாக யுகமாயினி இருந்தது. தன் கருத்துக்களுக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டச் சிற்றிதழாளர் சித்தன். ஒருசில முறை நேரில் சந்தித்து முகமன் உரைத்திருக்கிறேன். சிற்றிதழாளர் என்பதற்கு அப்பால் அவருக்கும் எனக்கும் பொதுவாக ஏதுமில்லை. ஆயினும் அந்த தீவிரம் என்றும் வணக்கத்திற்குரியது

 

சித்தன் அவர்களுக்கு அஞ்சலி.

 

யுகமாயினி இணையப்பக்கம்