முகுந்த் நாகராஜனின் குழந்தைகள்

இனிய ஜெயம் வழமைபோல கவிதை தேடுதலில் கண்டடைந்தவை இவை.  முகுந்த் நாகராஜன் எழுதிய புதிய கவிதைகள் இவை  முகுந்த் form-ல இருக்கார் போல . கடலூர் சீனு வீட்டைப் பிரித்தல் ================= பாத்ரூம் கதவென்று தப்பாக நினைத்த பாப்பா வீட்டுக்கதவைத் திறந்த உடனேயே போய் விட்டது. ஹாலைக் கடந்து படுக்கையறைக்குள் நுழைந்து பாத்ரூம் கதவைத் திறப்பதற்குள் காலம் கடந்து விட்டது. வழியெங்கும் சிந்திய நீர்த்துளிகள் வீட்டை இரண்டாகப் பிரித்து விட்டிருந்தன, குழந்தைக்கு முன், குழந்தைக்குப் பின் என. … Continue reading முகுந்த் நாகராஜனின் குழந்தைகள்