தல்ஸ்தோய் உரை- கடிதங்கள்


ஜெ அவர்களுக்கு

 

 

வணக்கம்..

 

நலமா?

 

தல்ஸ்தோய் உரை கேட்டேன்.. மிகச் சிறப்பான உரை.. உங்களுடைய உரைகள் நிறைய கேட்டிருக்கிறேன்… ஆனாலும், இந்த உரை மனதை தொட்டுவிட்டது. அன்னா கரீனினா மற்றும் புத்துயிர்ப்பு வாசித்திருக்கிறேன்.. தன்னறம் பற்றிய ஒரு கூர் ஆய்வை என் மனதுக்குள் நிகழ்த்திய உரை.. நெஹ்லூதவ் மற்றும் லெவின் வழியாக அறச்சிந்தனையை விவரித்தீர்கள்.. சிறிய அரங்கில் நிகழ்ந்த உரை என்றாலும், என் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்த உணர்வு.. இணையத்தின் சாத்தியங்கள் எத்தனை அதிசயங்களை நிகழ்த்துகிறது..

 

 

நன்றி ..நன்றி.. நன்றி..

 

பவித்ரா

 

அன்புள்ள ஜெ,

 

 

திங்கள்   இரவு அன்றுதான் upload செய்யப்பட்ட காணொளிகளை மொபைலில் டவுன்லோட் செய்தேன்; அதை அலுவலகளத்திலிருந்து வரும்போதுபார்த்துவிட  திட்டம்; நான் இப்பொழுது கம்பெனி மாற்றிவிட்டமையாலும் அது வீட்டிலிருந்து 40 கி மீ  தொலைவு, ஆகா வாசிக்க கூடுதல் நேரம் கிடைக்கும்;

 

சரியாக இன்று மாலை 5:40 company பஸ் கிளம்பியது (இன்று சென்னையில் மித மழை வேறு) அந்த காணொளியில் மிக சரியாய் “10:21” இல்  “மனித வாழ்க்கை என்பது உச்சத்தால் ஆனது மட்டும் அல்ல – அற்பமான விஷயங்களால் தொகுதியால் ஆனது  – போர் என்பது அற்பமான விஷயங்களின் தொகுப்பு – வரலாறு என்பதும் அதுதான் – வாழக்கை என்பதும் அதுதான்”, rewind செய்து ஒரு பத்து முறையாவது கேட்டிருப்பேன்; pause செய்து ஆழ்ந்து என்னுள் சென்றேன்

 

மீண்டும் காணொளியை பார்க்க ஆரம்பித்தேன் “resurrection”  நாவலை பற்றி ஆரம்பிக்கும் முன் மூன்று அடிப்டை கேள்விகள் தொட்டு நாவலுக்குள் என்னை இழுத்து போட்டு விட்டீர்கள் ,

 

உண்மையில் என் கட்டுப்பாட்டை யிழந்து வீட்டேன்;  மிக லேசாக கண்ணீர் விழிஓரம்…என் இருக்கையின் வலது பக்கம் இருந்தவள் என்ன ஆயிற்று என்பது போல் செய்கையில் கேட்டாள், நான் ஒரு “ஸ்மைல்”…(ஏனெனில் அவள்  “முட்டை யில் (“இந்திய நிறத்தில் இருக்கும்)  ஒரு மஞ்சள் நிறம்) மீண்டும் காணொளியை   தொடர்தேன்  .சைபீரியாவில் அவள் வாழ்க்கையை இவன் வாழ ஆரம்பித்தது நீங்கள் narrate செய்யும்போது,  கிட்டத்தட்ட அழுதே விட்டேன்!

 

ஜெ,  இதுவரையில் நான் குற்றவுணர்வு கொள்ளும் ஆகும் எந்த செயலையும் நான் செய்தது கிடையாது, resurreccion உம இதுவரை படித்தது கிடையாது, இருந்தும் நான் ஏன் உணர்வு கொந்தளிப்பை அடைந்தேன் ? தல்ஸ்தோய் வழியாக, ஜெ வழியாக எனக்கு ஒரு ஒரு அறம் மீண்டும் ஒரு கூற்றாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது, இந்த அனுபவத்தை தந்ததற்கு நான் தல்ஸ்தோய் க்கு என் கனவில் நன்றி சொல்லிகொள்ள்வேன்

 

7:40 க்கு வீடு  திரும்பினே மீண்டும் காணொளியை பார்க்க ஆரம்பித்தேன் , என் அம்மாவிடம் ஒரு வார்த்தை பேச வில்லை ;

மீண்டும் தொடர்ச்சியாக  மூன்றாம் முறை கேட்டேன் – என்னோ இன்றிரவு உணர்ந்த தோன்றவில்லை –   (நீங்கள் நம்பு வீர்களா என்று தெரியவில்லை, என தாய் மாமா அண்மையில் இறந்து விட்டார், அவர் இறப்பு பல உறவினர்கள்  அதை எதிர்பார்த்து காத்திருந்தனர்  என்று தான் கூறவேண்டும்;  “அப்படிப்பட்ட” ஒழுக்கமற்ற வாழ்க்கை அவர் வாழ்ந்தது .எதோ காரணத்தால் மீண்டும் இந்த ஞாயிறு மாலை கேள்வி ஒன்று மனதுக்குள் எழுந்தது, அது அவர் தன அளவில் மகிழ்ச்சியான வாழ்க்கையை தானே அவர் வாழ்ந்தார், எனவே எது அறம்?–பதில் இல்லை, குழப்பம் – இன்று அதற்கான சரியான விடை கிடைத்தது

 

மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டுதூங்க  செல்லப்போகிறேன்

 

நன்றி வணக்கம் !

 

பல ஈமெயில்கள் உங்களக்கு அனுப்பாமல், அனைத்தையும் draft லேயே வைத்திருக்கிறேன், இதை அனுப்பி விடுவதென்றே முடிவே செய்து  விட்டேன்

 

ராமகிருஷ்ணன்

 

 

என் உரைகள், காணொளிகள்

முந்தைய கட்டுரைஎம். கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி வாசிப்பனுபவம் 
அடுத்த கட்டுரைசிரிக்காத புத்தர்