யானைடாக்டரின் நிலம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சில நாட்களுக்கு முன் சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தேன்.  மணற்பரப்பு எங்கும்  உடைந்த பாட்டில்கள் மற்றும்  காலி  மது புட்டிகள்.  தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும்  கடற்கரைக்கு   இந்த நிலைமை.  இதை  பார்த்தவுடன் யானை டாக்ட்ர் கதை நினைவுக்கு வந்தது.  காலணி இல்லாமல் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். மக்களுக்கு, மருத்துவமனை இருக்கின்றது.  பாவம்  யானைகள்..

சிவா,

நன்னிலம்

***

அன்புள்ள ஜெ

சென்ற வாரம் டாப் ஸ்லிப் சென்றிருந்தேன். யானைடாக்டரின் நினைவில்லத்தைப் பார்த்தேன்

வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் காடு முழுக்க பிளாஸ்டிக் உறைகள், பீர்புட்டிகள். சிப்ஸ் பாக்கெட்டுகளையும் பிஸ்கெட் பாக்கெட்டுகளையும் அள்ளி வீசுகிறார்கள். பீர்ப்புட்டிகளை தூக்கி வீசுகிறார்கள். ஒரு மனிதர் எதற்காக வாழ்ந்தாரோ அதை அவர் வாழ்ந்த இடத்திலேயே சீரழிக்கிறார்கள்

இவர்களைத் தடுக்க முடியாதா? முடியும். இதே கும்பல் அப்படியே பரம்பிக்குளத்திற்குள் நுழைகிறது. நுழையும்போதே காவலர்  ‘பாலிதீன் கவரோ பாட்டிலோ இருந்தால் மரியாதையா நீங்களே கொடுத்துவிடுங்கள். உள்ளே பிடிபட்டால் வாழ்க்கை அழிந்துவிடும். அம்மா அப்பா என்றால் நடக்காது’ என்று கடுமையாகச் சொல்லிவிட்டார். ஒவ்வொருவராக பாட்டில்களை எடுத்துக் கொடுத்தார்கள்.

மிகச்சரியாக உள்ளே இன்னொருமுறை மறித்து சோதனை போட்டார்கள். ஒருவரிடம் பாட்டில் மாட்டியது. ஐடியில் வேலைபார்க்கும் பையன்போல. அப்படியே இழுத்துக்கொண்டு போனார்கள். சார் சார் என்று பரிதாபமாகக் கெஞ்சினார். காரோடு கொண்டு சென்று நிறுத்திவிட்டார்கள். பறம்பிக்குளத்தில் ஒரு பிளாஸ்டிக் குப்பை கிடையாது. ஆனால் டாப்ஸ்லிப்பும் பறம்பிக்குளமும் காட்டுமிருகங்களுக்கு ஒரே காடுதான்

டாப்ஸ்லிப்பில் நம்மிடம் கைநீட்டாத ஊழியர்களே கிடையாது. பத்துரூபாய் கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறார்கள். இவர்களால் என்ன சட்டத்தைப் பேணமுடியும்? கேரளத்திலுள்ள அதே சம்பளம்தான். ஆனால் self esteem துளிகூடக் கிடையாது. பெரும்பாலும் குடி அடிமைகள். பார்த்தாலே தெரியும். யானைடாக்டரையே நினைத்துக்கொண்டிருந்தேன்

சங்கர்ராமன்

அன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்”

யானை டாக்டர் பாடத்தில்

யானை டாக்டர் நினைவு கூரல்-செல்வேந்திரன்

யானை டாக்டர்

முந்தைய கட்டுரைபாலாஜி பிருதிவிராஜ் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆத்மாநாம் விருதுகள் விழா