நிலவில் முகம்

sai

இனிய ஜெயம்

நேற்று மாலை  இலக்கியக் கூடல் .நந்திக்கலம்பகம் மீது உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்த போது ஒரு குறுஞ்செய்தி . நிலவில் ஸ்ரீடி சாயிபாபா முகம் தெரிகிறது .உடனடியாக சென்று தரிசியுங்கள் . இதுவே தகவல் . பொதுவாக ஸ்ரீடி சாயிபாபா சமீப காலங்களில் மிகுந்த புகழ் பெற்று வருகிறார் . எனது நண்பர் சென்ற ஆண்டு  அவரது வீட்டை பாபா கோவிலாக மாற்றிய வகையில் இப்போது செல்வத்தில் கொழித்துக்கொண்டு இருக்கிறார் .
மக்களுக்கு அவ்வப்போது ஏதேனும் கேளிக்கை தேவை ,பிள்ளையார் பால் குடிக்க வேண்டும் , மரம் கண்ணீர் வடிக்க வேண்டும் ,மக்களுக்காக   கடன் சுமை தீர்ப்பது முதல் குழந்தை வரம் அருளுவது வரை இந்த தெய்வங்கள் எதை எதையோ செய்தாலும் ,மக்களுக்காக அவ்வப்போது இப்படி ஏதேனும் கேளிக்கைகளையும் உருவாக்க வேண்டியது இருக்கிறது .எல்லாமே லீலைகளின் ஒரு பகுதிதானே .
எதேச்சையாக நிலாவைப்பார்த்தேன் .பாவம் அப்பாவி மக்கள் . அதில் தெரிவது பாபா முகம் அல்ல சுந்தர ராமசாமி முகம் என்று  எப்போது அறிந்து கொள்ள போகிறார்களோ தெரியவில்லை .
கடலூர் சீனு
***
அன்புள்ள சீனு
உங்கள் கடிதம் வருத்தம் அளித்தது.
இவ்வளவு பிழையான பார்வையைக் கொண்டிருப்பீர்கள் என நினைக்கவே இல்லை
அன்றே அருண்மொழி எனக்கு ஃபோன் செய்து சொன்னாள். நிலவில் தெரிந்தது என் முகம்தான்
ஜெ
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-16
அடுத்த கட்டுரைகாடு-முடிவிலாக் கற்பனை