தல்ஸ்தோய் உரை- கடிதங்கள்

அன்புடன் ஆசிரியருக்கு

டால்ஸ்டாய் உரை கேட்டேன். நான் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பல அக இடர்பாடுகளுக்கு ஏற்கனவே என்னிடம் தீர்வுகள் இருந்ததுதான் என்னை இந்த அளவிற்கு அலைகழிக்கிறதோ என்று எண்ண வைத்தது இவ்வுரை. புத்துயிர்ப்புக்கு பிறகு டால்ஸ்டாயை வாசித்து ஓராண்டுக்கு மேலாகப் போகிறது. வெண்முரசை வெகுதீவிரமாக வாசித்து கொண்டிருந்த அதே காலத்தில் தான் நீங்கள் இவ்வுரையில் குறிப்பிட்ட டால்ஸ்டாயின் அனைத்துப் படைப்புகளையும் வாசித்திருக்கிறேன். அவை அளித்த தரிசனத்தின் மதிப்பினை இவ்வுரை தெளிவாகச் சுட்டியது. மறுபடியும் டால்ஸ்டாயை வாசிக்க வேண்டும்.

சற்றே உணர்ச்சிகரமான உரையுங்கூட. சில இடங்களில் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டீர்கள். ஆனால் அத்தகைய “தூய கோபமும்” அப்பெருங்கலைஞனைப் பற்றி பேசும் போது எழக்கூடியதே. எளிமையானவற்றின் மீது எனக்கிருக்கும் சந்தேகங்களை இவ்வுரை நீக்கியது. உன்னதமானவை சிக்கலற்றதாகவே இருக்க இயலும். குறைந்தபட்சம் சிக்கல்கள் (அல்லது அவற்றை களைவதற்கான எத்தனங்கள் கொண்டவன்)இல்லாத அகம் கொண்ட மனிதனே வாழ்வினை அதன் முழுப் பரிணாமத்துடன் வாழ்ந்து முடிக்க முடியும் என்பதைச் சொல்வதாக இவ்வுரை அமைந்திருக்கிறது.

நன்றி

அன்புடன்

எழுத்தாளனைப் பொறுத்தவரை கேள்விகள் எங்கிருந்தும் எழலாம். ஐயங்களும் எங்கிருந்தும் வரலாம். விடைகள், தீர்வுகளை அவன் எழுதிக்கண்டுகொள்ளவேண்டும்

ஜெ

ஐக்அ
சுரேஷ் பிரதீப்

அன்புள்ள சுரேஷ்

நலம்தானே?

அன்புள்ள ஜெ..

டால்ஸ்டாய் குறித்த இன்றைய உரையில் சற்று உணர்ச்சிவசப்பட்டு மனம் நெகிழ்ந்த நிலையில் பேசியது போல இருந்தது… சிறிய அரங்கம் என்பதும் ஒரு விதத்தில் உகந்ததாகவே இருந்தது

தெரிந்தே பொய் சொல்லும் ஊடகங்கள் , உண்மையான நல்லவர்களை சமூகம் என்ற சூழலிலும் நன்மையும் நேர்மையும் ஆஙகாங்கு பிரகாசிப்பது உண்மையிலேயே ஆச்சர்யம்தான்.

எனக்கென்னவோ தன்னறம் என்பதை சற்றும் பிரச்சார நெடியின்றி சொல்வதில் டால்ஸ்டாயை விட தாஸ்தயேவ்ஸ்கி மனதுக்கு நெருக்கமாக தோன்றுகிறார்

டால்ஸ்டாய் சிறுகதைகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள் என தெரிந்து கொள்ள ஆவல்..

இரண்டு கிழவர்கள், மனிதன்எதனால் வாழ்கிறான் என்பது போன்ற பல கதைகளை எப்படி பார்க்கிறீர்கள்

அன்புடன்

பிச்சைக்காரன்

பிச்சைக்காரன்
அன்புள்ள பிச்சைக்காரன்

தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி ஆகியோரில் ஒருவரைத் தெரிவுசெய்வதென்பது தனிப்பட்ட தேர்வு. வாசகனின் வாழ்வனுபவம், வாசிப்புப் பின்னணி ஆகியவற்றைச் சேர்ந்தவை.

தல்ஸ்தோயின் ஒழுக்க, அறப்பிரச்சாரம் என்பது அவருடைய படைப்பின் கலையை எவ்வகையிலும் குறைப்படுத்தவில்லை. அவை அவருடைய கலைக்கு அப்பால் தனியாகத்தான் நின்றுள்ளன. நவீனத்துவ காலகட்டத்தில் பிரச்சாரம் செய்யப்பட்ட ஒரு பிரக்ஞைபூர்வமான வடிவஒருமை பற்றிய முன்முடிவே தல்ஸ்தோய் கதைகளில் அவ்வாறு உணரச்செய்கிறது, அது அக்காலம் உருவாக்கிய தடை, அதை கடந்துவிட்டோம் என்பதுதான் நான் சொன்னது

அக்கதைகளைப்பற்றியும் மொத்தமாக தல்ஸ்தோய் பற்றியும் எப்போதாவது விரிவாக எழுதுகிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைஈர்ப்பு- விவாதம்
அடுத்த கட்டுரைவிமர்சனமும் வரலாறும் உரை