நம்பிக்கை -கடிதங்கள்-2

சிவகுருநாதன்
சிவகுருநாதன்

அன்புள்ள ஜெ

நம்பிக்கையூட்டும் சில வாழ்க்கைகளைப்பற்றி வாசித்தேன். உண்மையிலேயே மிகப்பெரிய மனநிறைவு ஏற்பட்டது. நமக்கு இங்கே காணக்கிடைப்பவர்கள் இரண்டு வகையானவர்கள். காரியத்திலே கண்ணாக இருக்கும் திருடர்கள். இன்னொருபக்கம் வெறுமே ஆற்றாமையும் கோபமுமாக வசைபாடிக்கொண்டிருக்கும் கையாலாகாதவர்கள். முகநூல் வந்தபின் வெற்றுச்சவடால்களை வாசிப்பது அன்றாட வாழ்க்கையாகவே ஆகிவிட்டது

மெய்யாகவே எதையாவது செய்யும் நண்பர்களை பற்றி தெரிந்துகொள்வது மிக அபாரமான மனநிறைவை அளிக்கிறது. இந்த நாளே நிறைவடைந்ததுபோல் இருக்கிறது. ஏற்கனவே சிலரை இங்கே அறிமுகம் செய்திருந்தீர்கள். தண்டபாணி என்ற அறிவியல் அறிஞர், மெய்யப்பன் நாராயாணன் என்னும் இயற்கைவேளான்மை ஆர்வலர் போன்றவர்கள்.

நன்றி
பிரபாகர்

***

சிவகுருநாதன், குக்கூ சிவராஜ், ஸ்டாலின்
சிவகுருநாதன், குக்கூ சிவராஜ், ஸ்டாலின்

 

அன்புள்ள ஜெ,

சரியான வாழ்க்கையா? பதிவு எனக்கும் ஒரு நிறைவான பதிலைத்தந்தது.

நம்பிக்கையின் ஒளி எனக்கு தெரியாத விஷயங்களையும் மனிதர்களையும் அறிமுகப்படுத்தியது. நானும் விரைவில் அவர்கள் நுகர்வோர் தான். முகநூல் பக்கத்தை like பண்ணிட்டேன்.

நன்றி
அன்புடன்
பகவதி

***

சிவகுருநாதந் குக்கூ சிவராஜ்
சிவகுருநாதந் குக்கூ சிவராஜ்
கைநெசவும் தனிவழியும்
சரியான வாழ்க்கையா?
நம்பிக்கையின் ஒளி
செயல்படுவோர் அளிக்கும் மீட்பு

அன்புள்ள ஜெ
கருத்துக்களுக்கு ஏதாவது மதிப்பு ஏற்படவேண்டும் என்றால் அவை பயன் அளித்திருக்கவேண்டும். ஏனென்றால் நடைமுறையில் தொண்னூறு சதவீதமான கருத்துக்கள் தோல்வியையே அடைகின்றன. கருத்துக்களை நடைமுறையில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் திருத்தித் திருத்திச் சரிசெய்தால் மட்டும்தான் அவற்றால் ஏதேனும் பயன் உண்டு. இதை ஒருவியாபாரியாகச் சொல்கிறேன்

ஆகவே வெறுமே எதையாவது சொல்பவர்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. செய்து காட்டுபவர்களே முக்கியமானவர்கள். அவர்களைத்தான் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். அவர்களின் கருத்துக்கள் மட்டுமே முக்கியம். அப்படிச் சிலரை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். நன்றி

மாதவன் அருணாச்சலம்

***

ஸ்டாலின் மின்னஞ்சல்: [email protected]

முகநூல் : பேஸ்புக் இணைப்பு

ஸ்டாலின்.பா: (9994846491).

*

சிவகுருநாதன்: www.nurpu.in |

fb: Nurpuhandlooms https://touch.facebook.com/Nurpuhandlooms/

[email protected]

===============================================================

அம்பரம் முகநூல் தொடர்பு  https://www.facebook.com/ambaramvirtue

===============================================================

அம்பரம் குங்குமம் கட்டுரை
உன்னால் முடியும்: பாரம்பரிய சுவையைத் தேடி ஒரு பயணம்
ஜே.சி.குமரப்பா நூல்கள்
சத்தியத்தின் குமாரன் – ஜே.சி.குமரப்பா (நிலைத்த பொருளாதாரம் – நூல் வெளியீட்டு விழா)
குக்கூ .இயல்வாகை – கடிதம்
துகள்
துகள் -கடிதம்
 
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-11
அடுத்த கட்டுரைமதுரையும் கடலும்