ஒருபாலுறவு, தீர்ப்பு- கடிதங்கள்

homo

ஒருபாலுறவு, தீர்ப்பு

ஓரினச்சேர்க்கை

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

தங்கள் மீது நன்மதிப்பும் அன்பும் கொண்ட வாசகனாக இக்கடிதம் எழுதுவதில்  பெருமகிழ்ச்சி.  பன்னெடுங் காலமாக மாறிவரும் தமிழ் சமூகத்தின் பின்புலத்தில் பொதுப்புத்தியில் உறைந்துள்ள கருத்துக்களின் விரிவான  ஆய்வாக தங்களின்  விளக்கம் அமைந்திருக்கிறது.

 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரவான மனநிலை கொண்டிருந்தாலும் பொதுவெளியில் இப்பிரச்சினை குறித்த விவாதங்களையும் எதிர்கொள்ள தேவையான தெளிவையையும் தங்கள் பதில் அளிக்கிறது.

 

தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் .

 

நன்றி.

 

பாபுஜி

கரூர்

 

அன்புள்ள ஜெ

 

இந்த தலைப்பு பற்றி என் எண்ணங்கள்.

 

நான் ஆஸ்திரேலியாவில் வசிப்பவள்.

 

நானும் போன வருடம் ஓரின சேர்க்கைக்கு ஆதரவு அளித்து வாக்களித்தேன்.

 

இதற்கு முக்கியமான காரணம் என் இரு பெண்களே. பெருமை தான் இதில் எனக்கு.

 

அவர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் அல்லர்.

 

ஆனால் ஓரின சேர்க்கையாளர்களை பற்றிய என் எண்ணத்தை மாற்றியவர்கள்.

 

அவர்களே என்னிடம் ஆஸ்திரேலியா அரசாங்கம் எடுக்க இருந்த ஓட்டளிப்பை பற்றி எனக்கு தெரிய செய்தார்கள்.

 

எனக்கு முன்னர் ஓரின சேர்க்கையாளர்களை பற்றி ஒரு அருவருப்பும் பயமும் தான் இருந்தது.

 

என் பெண்கள் இங்கேயே பள்ளிக்கு சென்றதாலோ என்னவோ அவர்களின் எண்ணம் ஓரின சேர்க்கையாளர்களும் நல்லவர்களே, இதுவும் இயற்கையான  ஒரு இணைப்பே என்றனர் என்னிடம்.

 

யோசித்து பார்த்த போது அவர்கள் சொல்வதிலும் அர்த்தம் இருப்பது போல் தோன்றியது.

 

ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு அளித்து நானும் ஓட்டளித்தேன்.

 

ஒட்டு கட்டாயமாக அளிக்கப்பட்ட வேண்டும் என்று அரசாங்கம் சொல்லவில்லை.  மற்ற தேர்தல்களுக்கு வாக்கு கொடுத்தே ஆக வேண்டும்.வாக்களிவில்லை இன்றேல் 120 டாலர்கள் வரை அபராதம் உண்டு.

 

வாக்களித்து விட்டு என் பெண்களிடம் தெரிவித்த போது,  அம்மா உன்னை நினைத்து எங்களுக்கு பெருமையா இருக்கிறது என்றார்கள். ஏன் என்று கேட்டதற்கு அம்மா, உன் வயதில் உள்ளவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றி கொள்ள மாட்டார்கள். ஆனால் நீ யோசித்து ஓரின சேர்க்கையாளர்களும் மனிதர்களே என்று அவர்களுக்காக வாக்களித்தாயே என்றார்கள்.

 

நான் சொன்னேன், மற்றவர்களுக்காக ஓட்டளித்த நான், நீங்கள் ஓரின சேர்க்கையாளர்களாக இருந்தால் மனதளவில் வருத்தப் பட்டிருப்பேன் என்றேன்.

 

இதை கேட்டு சிரித்த என் பெண்கள், எங்களால் உன்னை புரிந்து கொள்ள முடிகிறதம்மா. ஆனாலும் நீ யாரையாவது பார்க்கும் போது அவர்களையும் மதிப்பாய் அல்லவா? அது போதும் இப்போதற்கு என்றனர்.

 

இதன் நடுவில் என் அலுவலகத்தில் என்னுடன் வேலை பார்ப்பவர் ஓரின சேர்க்கையாளர். அது எனக்கு தெரியவே தெரியாது.

 

மார்டி க்ரா எனப்படும் ஓரின செய்கையாளர்களின் கேளிக்கையில் அவர் கலந்து கொண்டதாக என்னிடம் சொன்ன போது தான் அவரை பற்றி நான் அறிந்தேன். என் அலுவலகத்தில் மற்ற எல்லோருக்கு அவரை பற்றி தெரிந்திருக்கிறது.  எனக்கே தெரிந்திருக்கவில்லை. என் அறியாமையே அது.

 

அவரை சில வருடங்களாக எனக்கு தெரியும். என்னை பொறுத்த வரை அவர் ஒரு நல்ல மனிதரே.

அதில் சந்தேகமே இல்லை.

 

என் மனமாற்றத்தை எண்ணி எனக்கும் பெருமையாகத்தான் இருக்கிறது.

 

என் அன்பை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வேன்.

 

மாலா

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-15
அடுத்த கட்டுரைபாட்டும் தொகையும் ராஜ் கௌதமனும் – வளவ. துரையன்